𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


கல்முனை கமு/கமு/அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் இன்று (24) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இஸ்லாமிய சமூக சங்கத்தின் தலைவர் எம்.எஸ். சக்காப் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் உள்ளுராட்சி மாகாண சபைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வின் கெளரவ அதிதியாக கல்முனை கல்வி வலய நிர்வாக பிரதிக்கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக சம்மாந்துறை ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய விரிவுரையாளர் எம்.ஆர். முகமது நௌஷாத், கல்முனை அமானா வங்கி கிளை முகாமையாளர் எஸ்.எச்.எம். சமீம், ஓய்வுபெற்ற அதிபர் சட்டத்தரணி எம்.சி. ஆதம்வாபா ஆகியோரும் விசேட பேச்சாளராக கல்முனை முகையதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் பேஷிஇமாம் மௌலவி எம்.ஏ.எம் ஜப்ரான் (கௌஸி) ஆகியோர் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது, கல்முனை பிரதேச பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.















0 comments: