𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 

….
பல்லின சமூக கலாச்சரங்களை அங்கீகரித்து ஏற்றுக்கொண்ட இளம் சமூகத்தை உருவாக்குவதனை அடிப்படையாகக் கொண்டு தேசிய கொள்கை வகுப்பு முதல் சமூக மட்டம் வரை பல செயற்திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அந்தவகையில், மாணவ சமூகத்தில் இனசௌஜன்யத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் "இன நல்லிணக்கம், சமூக ஒருமைப்பாடில் இளம்தலைமுறை மற்றும் உளப்பாங்கு விருத்தி" எனும் தொனிப்பொருளின் கீழ் அல்-அஷ்ரப் தேசிய பாடசாலை மாணவ தலைவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு இறக்காமம் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வானது, நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல். றினோசா அவர்களின் ஒருங்கிணைப்பில் உதவி பிரதேச செயலாளர் திருமதி ஏ.கே. றொஸின்தாஜ் அவர்களின் தலைமையில் இச்செயலமர்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவ் விழிப்புணர்வு செயலமர்விற்கு பிரதம வளவாளராக பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) அவர்கள் கலந்துசிறப்பித்ததோடு "இன நல்லிணக்கம் மற்றும் சமூக ஒருமைப்பாடில் இளம்தலைமுறை" எனும் கருப்பொருளின் கீழ் விழிப்புணர்வை வழங்கி வைத்தார்.
"மாணவ தலைவர்களின் உளபாங்கு விருத்தி" எனும் கருப்பொருளின் கீழ் வளவாளராக உளவளத்துனை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப் அவர்கள் கலந்துகொண்டு அமர்வினை நடாத்தி வைத்தார்.
மேலும், வழிகாட்டல் நிகழ்வில், நிருவாக உத்தியோகத்தர் ஐ.எல். முஹம்மட் றஸாக், அல்-அஷ்ரப் தேசிய பாடசாலை ஆசிரியர்களான எஸ்.எல்.எம்.குத்தூஸ், ஏ.எல். ஹக்கீம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வின் இறுதியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






















0 comments: