𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


உலகின் பல நாடுகளில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டங்கள்
புத்தாடை அணிந்தும், நண்பர்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
அந்தவகையில், தேசிய சமூக ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு என்பவற்றை கட்டியெழுப்பும் நோக்குடன் நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் சிறப்பு தீபாவளி கொண்டாட்டம் இறக்காமம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், இறக்காமம் மாணிக்கமடு தமிழ் கிராமத்தில் 2025.10.22 ஆம் திகதி நடைபெற்றது.
நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல். றினோசா அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உதவி பிரதேச செயலாளர் திருமதி ஏ.கே. றொஸின்தாஜ் அவர்கள் கலந்துசிறப்பித்தார்.
மேலும் நிகழ்வில், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், நிருவாக உத்தியோகத்தர் ஐ.எல். முஹம்மட் றஸாக், கிராம உத்தியோகத்தர் ஏ.சி.எம். சமீர், பொருளாதர அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.சிறாஜ், உளவள ஆலோசகர் ஏ.எச்.றகீப், சுற்றுச் சூழல் அபிவிருத்தி உத்தியோகத்தர். வை.பி. ஜெமீனா உட்பட கிராம மட்ட தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மாணவர்களின் தீபாவளி சிறப்பு கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












0 comments: