𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


தரம் ஐந்து புலமை பரிட்சையில் வெட்டு புள்ளிகளுக்கு மேல் சித்தி அடைந்த மாணவர்களை கௌரவித்தல்., ஆசிரியர்களை கௌரவித்தல், பாடசாலையில் இருந்து இடமாற்றம் பெற்ற ஆசிரியர்களை கௌரவித்தல், பாடசாலை ஆசிரியை ஆசிரியர்களுக்கான சீருடை அறிமுகம் மற்றும் பாடசாலைக்கு நேர காலத்தோடு வருகை தந்து பாடசாலயை துப்புரவு செய்த மாணவர்களை கௌரவித்தல் என ஐம்பெரும் நிகழ்வுகளை ஒன்றிணைத்து பாடசாலை அதிபர் எம்.எ, சலாம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை வலய கல்வி பணிமனையின் பிரதி கல்வி பணிப்பாளர் எம். எச், எம், ஜாபிர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக கல்முனை கல்வி வலயத்தின் ஆரம்ப பிரிவுக்குரிய ஆசிரிய ஆலோசகர் ஐ.எல் அப்துல் ரகுமான், EPSI இணைப்பாளர் எம். எம். ஏ. ஹபீல், வைத்தியர் எம்.எம் ஜுமான ஹசின் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் பாடசாலை அபிவிருத்தி குழுவினரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாணவர்களுக்கு பாடசாலையினால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டதோடு கல்முனை மக்கள் வங்கியினால் பதக்கங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதுன் ஆசிரியர்களுக்கான நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டது.
மேலும் நிகழ்வில் கல்முனை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் தரம் 5 வகுப்பிற்கு கற்பித்த ஆசிரியருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.








0 comments: