𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


அந்தவகையில், ஆபத்தான விளிம்பு நிலையிலுள்ள சிறுவர்கள் மீதான கூடிய அவதானமும் தொடரான கண்காணிப்பை மேற்கொள்ளல் தொடர்பான வேலைத்திட்டங்கள் பற்றி ஆராயும் விஷேட சந்திப்பு பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவு மற்றும் இறக்காமம் பொலிஸ் நிலைய பல்வேறு குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பி. பகீரதன் (IP).அவர்களுக்கும் இடையில் அண்மையில் நடைபெற்றது.
ஆபத்தான சூழ்நிலையில் உள்ள சிறுவகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான வேலைத்திட்டத்தினையும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் இறக்காமம் பொலிஸ் நிலையம் மற்றும் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரிவுகள் இணைந்து செயற்படுத்தப்படவுள்ளத்ன .
இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் குற்றச் செயல்கள், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள், வீட்டு வன்முறைகள், பாடசாலை இடைவிலகல் மற்றும் மாணவர்கள் இளைஞர்களை மையப்படுத்திய போதை பாவனை மற்றும் வியாபாரம் என்பன அதிகரித்து காணப்படுகின்றன.
மேலும், பிரதேச சிறுவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில், பாடசாலை இடை விலகள், கல்வி ரீதியான பிரச்சினைகள், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு, பிரத்தியேக கல்வி நடவடிக்கைகள், சிறுவர்களை மையப்படுத்திய போதைப் பாவனை, இளவயது திருமணம், சிறுவர்களின் சுகாதார மேம்பாடு, விஷேட தேவையுடைய சிறுவர்களின் நலனோம்பல் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டதுடன் அவற்றுக்கான விஷேட வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இந்நிகழ்வில் உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப், முன்பிள்ளைப்பருவ உத்தியோகத்தர். ஆர்.எம். இம்டாட், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.ஐ. பஸீனா, சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் வை. பி. யஷோதா, பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் எம்.எம்.கே. சாஜிதா,
மற்றும் பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் வை.டி. சுவர்னா ஹேமலதா மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் எம்.டி. கடாபி, குற்றப்புலனாய்வு பொலிஸ் உத்தியோகத்தர் பி. லோஜிதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.






0 comments: