Thursday, September 18, 2025

நற்பிட்டிமுனை ஐ.ஆர்.எம் பவுண்டேஷன் நடாத்திய உதைப்பந்தாட்ட இறுதி போட்டி..! ✅👉 பிரதம அதிதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ்.

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 நற்பிட்டிமுனை ஐ.ஆர்.எம் பவுண்டேஷன் நடாத்திய உதைப்பந்தாட்ட இறுதி போட்டி..!
✅👉 பிரதம அதிதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ்.
✍️ சர்ஜுன் லாபீர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 நற்பிட்டிமுனை ஐ.ஆர்.எம் பவுண்டேசன் பெருமையுடன் நடாத்திய மர்ஹும் சாகுல் ஹமீட் நிஸாபீர் மற்றும் மர்ஹும் றியால் ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை(12) நற்பிட்டிமுனை அஸ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இப் போட்டிக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிரேஸ்ட சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இப் போட்டியில் சிறப்பு அதிதிகளாக எம்.எச்.கே நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.மாஜீத்,ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் வை.ஏ.கே தாஸிம்,நற்பிட்டிமுனை ஹிமாஸ் மல்டி சென்டர் உரிமையாளர் எஸ்.எம் லத்தீப் ,எம்.நியாஸ்,மற்றும் கல்முனை லீடர் அஸ்ரப் பெடரேசன் தவிசாளர் ஏ.எல் சறூக் உட்பட ஐ.ஆர்.எம் பவும்டேசனின் நிர்வாக சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ் இறுதிப் போட்டியில் 4ம்,5ம் குளனி கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து நற்பிட்டிமுனை ரோயல் விளையாட்டுக் கழகம் மோதின. தண்டனை உதையின் மூலம் 4ம்,5ம் குளனி கோல்ட் ஸ்டார் அணி வெற்றி பெற்று சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்



















SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: