𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் தலைமை தாங்கினார்.
மர்ஹூம் முழக்கம் ஏ.எல். அப்துல் மஜீத் அவர்களின் நூலைப் பற்றி பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் அவர்கள் ஆய்வுரையை ஆற்றினார்.
பிரதம அதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கலந்து கொண்டார்.
அதிதிகளாக அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் ஏ.எல்.எம். அதாவுல்லா, கட்சியின் பிரதித் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். ஹிஸ்புல்லாஹ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம், கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், பாராளுமன்ற உறுப்பினர் பாசித், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக், கட்சியின் தேசிய பொருளாளரும் கல்முனை முன்னாள் மாநகரசபை பிரதிமுதல்வருமான ரஹ்மத் மன்சூர், ஏறாவூர் நகரபிதா நழீம், அட்டாளைச்சேனை நகரபிதா உவைஸ், இறக்காமம் பிரதேச நகரபிதா முஸ்னி, அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தவம், காரைதீவு நகரபிதா சு. பாஸ்கரன், நிந்தவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி, மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் உச்சபீட உறுப்பினர்கள், போராளிகள், மர்ஹூம் முழக்கம் ஏ.எல். அப்துல் மஜீத் அவர்களின் குடும்பத்தினர் என பலர் கலந்து சிறப்பித்தனர்.























0 comments: