Friday, August 22, 2025

கல்முனை பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிநேகபூர்வ சந்திப்பு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 கல்முனை பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிநேகபூர்வ சந்திப்பு..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 கல்முனை பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினருடன், ஊரின் தற்போதைய பிரச்சினைகள், அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால செயல் திட்டங்கள் தொடர்பான விரிவான கலந்துரையாடல் இன்று (11) கல்முனை பெரிய பள்ளிவாசல் அலுவலக காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித், கட்சியின் பொருளாளரும் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர், இளைஞர் அமைப்பாளரும் பொத்துவில் நகரபிதாவுமான M. முஷரப், காத்தான்குடி நகரசபை முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர், மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன், கட்சியின் உச்சபீட உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிருவாகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலில்,
கல்முனை நகரின் அடிப்படை வசதிகள் மேம்பாடு
மக்கள் நலனுக்கான புதிய அபிவிருத்தி திட்டங்கள்
இளைஞர் மற்றும் கல்வி முன்னேற்ற முயற்சிகள் போன்ற பல முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
இந்த சந்திப்பில் பள்ளிவாசல் நிருவாகத்தினர் மற்றும் பொதுமக்கள், உலமாக்கள், ஊர் புத்திஜீவிகள் ஆகியோர் பங்கேற்று தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர். நிகழ்வு முழுவதும் நட்புறவு மற்றும் ஒருமைப்பாட்டு சூழல் நிலவியது.

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்















SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: