𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இந்நிகழ்வில், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் நிதியுதவியின் கீழ் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை, பெண்களின் சுயதொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் குடும்பங்களின் ஆதார வாழ்வின் முன்னேற்றத்துக்கும் வழிவகுப்பதாகும்.
இந்நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகள்,பவுண்டேசனின் நிர்வாக குழு உறுப்பினர்கள்,சமூக சேவையாளர்கள்
என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
தையல் இயந்திரம் பெற்ற பயனாளி ஒருவர், “எனது குடும்பத்தின் வாழ்க்கை தரத்தை உயர்த்த இந்த இயந்திரம் முக்கிய பங்காற்றும். எனது நன்றி பவுண்டேசனுக்கும், ரஹ்மத் மன்சூர் அவர்களுக்கும்,” என உணர்வுபூர்வமாக தெரிவித்தார்.
இந்த நிகழ்வு, ரஹ்மத் பவுண்டேசன் தொடர்ந்து செய்து வரும் பல்வேறு சமூக நலத்திட்டங்களில் இன்னொரு முக்கிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.



0 comments: