𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இந்த மகிழ்வூட்டும் விழா, கல்லூரியின் பணிப்பாளர் கெளரவ ரியாஸ் அவர்களின் அவர்களின் தலைமையில் நடை பெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை முன்னாள் மாநகர சபை பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும் மற்றும் ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகர் கௌரவ ரஹ்மத் மன்சூர் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் வெற்றியை வாழ்த்தி, அவர்களது எதிர்கால வெற்றிக்குத் தேவையான தன்னம்பிக்கையையும், ஊக்கத்தையும் தரும் ஆற்றல்மிக்க உரையொன்றை நிகழ்த்தினார்.
மேலும், YWMA பேரவையின் தலைவி சகோதரி பவாஸா தாஹா மற்றும் CSWMA பேரவையின் தலைவி சகோதரி சீனியா தாஸிம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டு மாணவர்களை நேரில் பாராட்டினர்.
பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் ரஹ்மத் பவுண்டேசனின் உயர்மட்ட பிரதிநிதிகள் என பெருமளவிலானோர் இந்நிகழ்வில் பங்கேற்று, கல்லூரியின் ஒளி வீசிய சாதனையாளர்களுக்கு உற்சாக நிமிடங்களை வழங்கினர்.
இந்த விழா, வெற்றிக்குப் பின்னால் உள்ள உழைப்பையும், கடமையுணர்வையும் கொண்டாடும் ஒரு அரிய தருணமாகவும், இளைய தலைமுறையை கல்வி நோக்கி வழிநடத்தும் உந்துசக்தியாகவும் இந் நிகழ்வு அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.





















0 comments: