𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


ரஹ்மத் பவுண்டேஷனுக்கு கிடைத்த கோரிக்கைகளின் அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கான இருசக்கர நாற்காலிகள், பவுண்டேஷனின் ஸ்தாபகரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் பணிப்புரைக்கமையான சமூக சேவையாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், CSWMA பேரவையின் தலைவி சகோதரி சீனியா தாஸிம் மற்றும் YWMA பேரவையின் தலைவி சகோதரி பவாஸா தாஹா ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டு நிகழ்வுக்கு மெருகூட்டினார்கள். அவர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
பயனாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன், பவுண்டேஷனின் உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் நிகழ்வில் பங்கெடுத்து, இதுபோன்ற நடவடிக்கைகள் சமூகத்துக்கு உணர்வு நிரம்பிய ஒளியை பரப்புவதாக பாராட்டினார்கள்.
இந்நிகழ்வு, ஒருவருக்கொருவர் தோள்கொடுத்து வாழும் சமூகத்தின் முகமாகவும், மனிதநேயத்திற்கான நட்புறவுகளின் உதாரணமாகவும் அமைந்தது.





0 comments: