Sunday, June 15, 2025

மனிதநேயத்தின் முன்மாதிரி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 மனிதநேயத்தின் முன்மாதிரி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி..!
✍️ எஸ். சினீஸ் கான்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 இரு நாடுகளுக்கிடையிலான நட்பு, புரிதல் மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கும் பணியில் தூதுவர்களே முக்கிய பங்காற்றுகிறார்கள். அவர்கள் செயலில் மட்டும் அல்ல, செயல்முறையிலும் மனிதநேயத்தைக் கொண்டு இந்த பணியை மிகுந்த அர்ப்பணிப்பு, நேர்மையுடன் நிறைவேற்றிக்கொண்டிருப்பவர்தான் இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி.
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அவர்கள், தனது சேவைக்காலத்திலே இலங்கையின் பல துறைகளில், குறிப்பாக சமூக நலன், கல்வி, பொருளாதாரம், பண்பாட்டு பரிமாற்றம் மற்றும் மனிதாபிமான பணிகளில் அதிகமான அளவு தனது முழுமையான பங்களிப்புக்களை வழங்கிவருகிறார். எளிய மக்களோடு நேரில் தொடர்பு கொண்டு அவர்களது தேவைகளை நிறைவேற்றும் உன்னத பணியை மேற்கொண்டுவருகிறார்.
இலங்கை - சவுதி உறவுகள் வலுப்பெறுவதற்கான தூணாக அவர் திகழ்வதுடன், இருநாடுகளுக்கிடையே உயர் மட்ட சந்திப்புகள், வர்த்தக ஒப்பந்தங்கள், கல்வி பரிமாற்ற திட்டங்கள் மற்றும் தொழில் வாய்ப்புகள் ஆகியவற்றை மேம்படுத்த அவர் மேற்கொள்ளும் முயற்சிகள், இலங்கை மக்களுக்கும் பல நன்மைகளை பெற்றுத்தந்திருக்கிறது. இலங்கையின் பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் ஹஜ் வழிப்பாட்டுக்காகச் சவுதிக்கு செல்லும் போது ஏற்படும் சவால்களை களத்தில் நின்று தீர்ப்பது மட்டுமல்லாமல், சக மத மக்களுக்கும் மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
அவர் வெளிப்படுத்தும் பணிவும், பாரம்பரியத்தை மதிக்கும் நெறிமுறையும் இலங்கை மக்களின் மனதில் இடம் பெற்றுள்ளது. தனது அதிகார பூர்வத்தை தாண்டியும் மனித நேயத்தின் அடிப்படையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
அவர் தனது செயல், சொல் மற்றும் செயல்களால், தூதுவர் என்பது அதிகாரத்தின் பிரதிநிதி மட்டுமல்ல, ஒரு அர்ப்பணிப்பு மிக்க மனித நேயத்தின் தூது என்பதைக் எமக்கு காட்டியுள்ளார்.
இன்றைய உலகில் சமாதானம், நம்பிக்கை, நட்பு போன்றவை மிக முக்கியமாக போற்றப்பட வேண்டிய நேரம் இது. அத்தகைய சூழலில் தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி அவர்களின் சேவை ஒளிக்காற்றாகத் திகழ்கிறது.
அவர் விதைக்கும் மனித நேயத்தின் விதைகள், நாளைய தலைமுறைகளுக்கும் நிச்சயமாக ஒரு ஒளி வீசும் வழிகாட்டியாக இருக்கும்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: