Sunday, June 15, 2025

சாய்ந்தமருதில் போதைப்பொருள் எதிர்ப்பு மகளிர் எழுச்சி மாநாடு..!

Ad 728x90

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 சாய்ந்தமருதில் போதைப்பொருள் எதிர்ப்பு மகளிர் எழுச்சி மாநாடு..!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளை வலுவூட்டும் நோக்கில் சமுதாய அமைப்பின் நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கி வைக்கும் நிகழ்வு (29) வியாழக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சமுர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சி.ஏ.நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடையாள அட்டைகளை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, சமுர்த்தி வங்கி சங்கத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் எஸ்.றிபாயா, சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல். ஜஃபர், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களை வழிநடத்தும் அபிவிருத்தி உத்தியோகத்தர் றிகாஸா ஷர்பீன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எம்.அபுல் ஹுதா, எம்.எம். ஜாபீர், சமுர்த்தி பிரதேச சமுதாய அமைப்பின் தலைவர் கே.எம்.கபீர், பொருளாளர் யூ.எல்.ஜுனைதா உள்ளிட்ட சமுதாய அடிப்படை அமைப்புகளின் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது சமுதாய அடிப்படை அமைப்புகளின் நிர்வாகிகள் 200 பேருக்கு இந்த அடையாள அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டது. சாய்ந்தமருதில் மே 31 - ஜூன் 17 வரை வீடு வீடாக போதைப்பொருள் மற்றும் புகைத்தல் எதிர்ப்பு பிரச்சாரத்தினை மேற்படி சமுர்த்தி சமுதாய அமைப்புக்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஜூன் 04 ஆம் திகதி சாய்ந்தமருதில் போதைப்பொருள் எதிர்ப்பு மகளிர் எழுச்சி மாநாடு நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்







SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: