Friday, May 16, 2025

எங்களிடம் சமூக முன்னேற்றத்திற்கான சிறந்த திட்டங்கள் உளள்ளன. நிதிஉதவிகளை வழங்குமாறு மைமூனா அமையத்தின் தலைவர் என்.எம்.நௌஸாத் கோரிக்கை..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 எங்களிடம் சமூக முன்னேற்றத்திற்கான சிறந்த திட்டங்கள் உளள்ளன. நிதிஉதவிகளை வழங்குமாறு மைமூனா அமையத்தின் தலைவர் என்.எம்.நௌஸாத் கோரிக்கை..!
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 கல்முனை மைமூனா அமையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கௌரவிப்பு நிகழ்வில் அமைப்பின் தலைவரும் சிரேஷ்ட மனநல ஆலோசகருமான என்.எம்.நௌஸாத் உரையாற்றும் போது ......
சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனின் அச்சமுகத்திற்கு சீரான கல்வியை வழங்க வேண்டும் எனும் பிரதான நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கல்முனை மைமூனா சமூக அபிவிருத்தி அமையம் பல்வேறு கல்விசார்ந்த வேலைத்திட்டங்களை செயற்படுத்தி வருகிறது.
ஒரு வேலைத்திட்டத்தினை வெற்றிகரமாக செயற்படுத்தி இலக்கினை அடைந்து கொள்வதற்கு சிறந்த திட்டம், அதனை செயற்படுத்துவதற்கான ஆளணி, தேவையான நிதி ஆகிய மூன்றும் தேவை.எங்களது அமைப்பிடம் சிறந்த திட்டங்கள் உள்ளன. அதனை செயற்படுத்துவதற்கான பல்துறை சார்ந்த ஆளணியும் காணப்படுகிறார்கள் ஆனால் நிதி இல்லாமை என்பது மிகப்பெரிய குறைபாடாகும் சமூகத்திலுள்ள தனவந்தர்கள் மைமூனா அமையத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதற்கு முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
மேலும் உரையாற்றுபோது பெண் ஜனாசாக்களை குளிப்பாட்டி கபனிடும் பயிற்சி வகுப்பானது சிறந்த உலமாக்களினால் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தினூடாக ஆலிமாக்களைக் கொண்டு கற்பிக்கப்பட்டு செய்முறை பயிற்சியும் வழங்கப்படுகிறது.
எதிர்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இப்பயிற்சியைப் பெற்ற ஒரு பெண்மணி யை உருவாக்குவதே எங்களது நோக்கமாகும்.
இந்த நிகழ்வில் 2024/2025. G.C.E(A/L) பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களையும் பாராட்ட வேண்டும் என்பதே எங்களது விருப்பமாகும் ஆனால் பொருளாதார நிலமை காரணமாக மாவட்டமட்டத்தில் 1ம் தரத்தில் சித்தியடைந்து மருத்துவபீடத்திற்கு தெரிவாகியுள்ள MN.பாத்திமா சப்ரின் எனும் மாணவியை மட்டும் இன்று பாராட்டி கௌரவிக்கின்றோம் என்று கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: