Monday, March 3, 2025

கல்முனை அல்- அஸ்கர் வித்தியாலய சிரேஷ்ட மாணவர்களின் விடுகை விழாவும், பரிசளிப்பும்..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 கல்முனை அல்- அஸ்கர் வித்தியாலய சிரேஷ்ட மாணவர்களின் விடுகை விழாவும், பரிசளிப்பும்..!
✍️ மாளிகைக்காடு செய்தியாளர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 கல்முனை கல்வி வலய கல்முனை அல்- அஸ்கர் வித்தியாலய சிரேஷ்ட மாணவர்களின் விடுகை விழாவும், பரிசளிப்பும் பாடசாலை அதிபர் ஏ.எச். அலி அக்பர் தலைமையில் பாடசாலை அரங்கில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு பணிப்பாளர் சபை முன்னாள் உறுப்பினரும், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா தவிசாளருமான யூ.எல். நூருல் ஹுதா, நற்பிட்டிமுனை அல்- கரீம் பௌண்டஷன் தலைவர் சட்டத்தரணி ஏ.சி. ஹலீம், தமிழ் பாட வளவாளர் ஜெஸ்மி எம் மூஸா, கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை முன்னாள் அதிபர் எம்.எஸ்.எம். ஹம்ஸா உட்பட பலரும் கலந்து கொண்டு பாடங்களில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவித்து வாழ்த்துரை நிகழ்த்தினர்.
மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பிக்கும் வகையில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன் மாணவர்களின் திறமையை பாராட்டி ஆசிரியர் எல்.எம். நிப்ராஸின் நெறிப்படுத்தலில் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் கற்பித்த ஆசிரியர்களும், பாடசாலை அதிபரும் இதன்போது மாணவர்களினால் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர், உதவி அதிபர்கள், பகுதி தலைவர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் என பலரும் கலந்து கொண்டனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்







SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: