Monday, March 24, 2025

துஆபிரார்த்தனையும்மாபெரும் கந்தூரியும்இப்தார் நிகழ்வு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 துஆபிரார்த்தனையும்மாபெரும் கந்தூரியும்இப்தார் நிகழ்வு..!
✍️ ஏறாவூர் நிருபர் சாதிக் அகமட்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 ஏறாவூரில் ஆன்மீக ஒளி வீசிக் கொண்டிருக்கும் அஸ்ஸெய்யிதா ஷரீபா ஜமீலா அவ்லியா உம்மா அவர்களின் புனித தர்ஹா ஷரீபில் வருடாந்தம் நடைபெறும் சத்திய தீனுல் இஸ்லாத்தின் காவலர்களான புனித பத்ர் ஸஹாபாக்களின் நினைவு தின துஆ பிரார்த்தனை மாபெரும் கந்தூரி இப்தார் விருந்தோம்பல் நிகழ்வு சங்கைக்குரிய குருநாதர் அஸ்ஸெய்யிது ஷரீப் ஹஸனுல்அன்வர் மௌலானா ஸைபுல்லாஹி அல்ஹஸனி வல்ஹுஸைனி அவர்களின் தலைமையிலும் வழிகாட்டலிலும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான இறையன்பர்கள் கலந்து சிறப்பித்தனர். மத்ரஸது அஹ்லுல் பைத் மற்றும் ஹஸனிய்யதுல் காதிரிய்யா அரபுக் கல்லூரி மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சிகளும் மௌலவி ஏ.ஏ.பஷீர் ரப்பானி மௌலவி யூ.ஏ.முனாப் மன்பஈ ஆகியோரின் மார்க்க சொற்பொழிவுகளும் இடம்பெற்றன. அதைத் தொடர்ந்து புனித பத்ர் ஸஹாபாக்களின் மௌலித் மஜ்லிஸ் நடைபெற்றது. அதில் சங்கைக்குரிய குருநாதர் வாப்பா அவர்களின் ஆன்மீக பேருரையும் முழு முஸ்லிம் சமூகத்துக்காவும் குறிப்பாக பலஸ்தீன மக்களுக்காகவும் நாட்டின் சுபீட்ச்சத்துக்குமான துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றன. இதில் சங்கைக்குரிய ஸாதாதுமார்கள் உலமாக்கள் அரசியல் பிரமுகர்கள் தரீக்கா சகோதரர்கள் ஊர்மக்கள் அனைவருக்குமான கந்தூரி விருந்துபச்சாரம் வழங்கப்பட்டது .

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்














SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: