Wednesday, March 12, 2025

விஷேட குழுவை அமைத்து மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிரச்சினைகளை தீருங்கள் - எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 விஷேட குழுவை அமைத்து மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிரச்சினைகளை தீருங்கள் - எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை..!
✍️ எஸ். சினீஸ் கான்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 எமது நாட்டில் பல்வேறு பட்ட பிரச்சினைகள் பல ஆண்டுகளாளாக தீர்க்கப்படாமல் காணப்படுகிறது. இவைகள் நீங்கள் ஆட்சிக்கு வந்த பின் உருவான பிரச்சினைகள் அல்ல. ஒவ்வொரு பிரதேசங்களிலும் மாவட்டங்களிலும் நீண்டகாலமாக இருந்து வருகிறது என்றாலும் மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்களை ஆட்சிக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். எனவே இப்பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு தேவையான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென உரிய அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் வலியுத்துகிறேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்ததலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (4) நடைபெற்ற 2025 வரவு - செலவுத்திட்டத்தின் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கான எல்லைகள் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. பானம்பலன என்ற ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு நாடளாவிய ரீதியில் சிபாரிசுகளை முன்வைத்திருந்தது. இந்த சிபாரிசுகளின் அடிப்படையில் நாட்டில் பல்வேறுபட்ட பகுதிகளில் பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட நிலையிலும் கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலக பிரிவின் பிரதேச சபையும் இன்னும் உருவாக்கப்படாமல், எல்லைகள் நிர்ணயிக்கப்படாமல் நிர்வாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆகவே பானம்பலன ஆணைக்குழுவின் சிபாரிசுகளுக்கும் அமைவாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோன்று! மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேச செயலகங்களின் எல்லைகள் இன்றளவில் நிர்ணயிக்கப்படவில்லை. நிர்வாகம் ஒரு செயலகம், காணி ஒரு செயலகம் என்று யுத்தத்தால் ஏற்பட்ட பிரச்சினைகளால் குளறுபடிகள் தோற்றம் பெற்றுள்ளன. பொது நிர்வாக அமைச்சு ஊடாக விஷேட குழு ஒன்றை நியமித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலக பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கேட்டுக்கொள்கிறேன். என்றார்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: