Sunday, February 23, 2025

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

Ad 728x90



ஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது.

 

 இந்நிலையில் நேற்று 6 இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தது.  ஆனால் திட்டமிட்டபடி அவர்களுக்கு ஈடாக இஸ்ரேல் பிடித்துவைத்துள்ள பலஸ்தீன கைதிகளில் 650 பேரை விடுதலை செய்ய மறுத்துள்ளது. வரும் மார்ச் 1 ஆம் திகதியுடன் போர் நிறுத்தம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகி உள்ளது.


இதுதொடர்பாக இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில்

 

"ஹமாஸின் தொடர்ச்சியான மீறல்களைக் கருத்தில் கொண்டு நமது பணயக்கைதிகளை அவமதிக்கும் அவமானகரமான விழாக்கள் மற்றும் பணயக்கைதிகளை பிரச்சாரத்திற்காக இழிவாகப் பயன்படுத்துவதன் காரணமாக நேற்று (22) திட்டமிடப்பட்ட பலஸ்தீன கைதிகளின் விடுதலையை தாமதப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது " என்று தெரிவித்துள்ளார்.

 

நேற்று 6 இஸ்ரேலிய கைதிகள் விடுவிக்கப்படும்போது அதில் ஒருவர் ஹமாஸ் அமைப்பினர் ஒருவருக்கு நெற்றியில் முத்தமிட்ட காட்சி வைரலானதை தொடர்ந்து இஸ்ரேல் இந்த முடிவை எடுத்துள்ளது.

 

இந்நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து ஒப்பந்தத்தை மீறி வருவதாக ஹமாஸ் மூத்த அதிகாரி பாஸ்ஸெம் நயீம் தெரிவித்தார்.

 

 

 இது தொடர்பாக அவர் கூறுகையில் ,

 

"போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தின் போது, இஸ்ரேலிய இராணுவம் 100  பலஸ்தீனர்களைக் கொன்றது.

 

இதுபோன்று தொடர்ந்து வரும் செயல்கள் ஒப்பந்தத்தை முறிக்கவும், மீண்டும் போருக்குத் திரும்புவதற்கான அதன் விருப்பத்தை வெளிப்படுத்தும் வலதுசாரி இஸ்ரேல் அரசாங்கத்தின் ஒரு மோசமான தந்திரம் என்று நாங்கள் கருதுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.


 

SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: