ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 12 முறை நாணயசுழற்சியில் தோற்று இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது.
9ஆவது ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் 5ஆவது லீக் போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
இந்நிலையில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக 12 முறை நாணயசுழற்சியில் தோற்று புதிய சாதனை படைத்துள்ளது.
இதன்மூலம் அதிக முறை நாணயசுழற்சியில் தோற்ற நெதர்லாந்து அணியின் சாதனையை இந்தியா முறியடித்ததும் குறிப்பிடத்தக்கது.


0 comments: