🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அபிவிருத்தி தொடர்பில் ரஹ்மத் மன்சூருடன் விசேட சந்திப்பு…!
✍️ எம்.சி.எம்.ஷம்சுல் முனா
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………………
✅👉 கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தின் எதிர்கால அபிவிருத்தி, கல்வி மேம்பாடு மற்றும் மாணவர்களின் கல்விச் சாதனைகளை உயர்த்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ரஹ்மத் மன்சூர் அவர்களுடனான சந்திப்பின்போது இடம்பெற்றது.
இதில் பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எச்.ஆர். மஜீதியா, பிரதி அதிபர் எம்.ஏ. பாத்திமா மிஸ்னா, பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் (தேசமானிய) எஸ்.எச்.எம். அஜ்வாத், குழு உறுப்பினர்களான அகில இலங்கை ஜம்மியதுல் உலமா கல்முனை கிளை தலைவர் மெளலவி ஏ.எல்.எம். முர்ஷித் (முஃப்தி), எம்.ஜே.எம். சமீர், ஐ.எஸ். சித்தி ஷெரீன், எம்.எஸ்.எச்.எம். மனாஷ் மற்றும் பெற்றோர் சார்பில் எஸ்.ஏ.எம். ரிஸ்லி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் பாடசாலையின் எதிர்காலத் தேவைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விளக்கமளித்ததுடன், அதிபர் எம்.எஸ்.எச்.ஆர். மஜீதியா அவர்கள் பாடசாலையில் முன்னெடுக்கப்படும் கல்விசார் வேலைத்திட்டங்கள், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான முயற்சிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி மேம்பாடு மற்றும் மாணவர்களுக்கான நவீன கற்றல் வாய்ப்புகளை மேம்படுத்துவதில் சமூகப் பங்களிப்பின் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்









0 comments: