📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 ஒரு துளி இரத்தம்… ஓர் உயிரின் நம்பிக்கை! இறக்காமத்தில் மனிதநேயத்தை முன்னிறுத்தி மாபெரும் இரத்ததான நிகழ்வு…!
✍️ ஏ.எச்.றகீப்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………
✅👉 இறக்காமம் இளைஞர் சேவைகள் மன்றம், இறக்காமம் இளைஞர்கள் அமைப்பு, இறக்காமம் பிரதேச சபை, அகில இலங்கை ஜம்மியத்தில் உலமா - இறக்காமம், ரம்ய லங்கா - இறக்காமம், அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் - இறக்காமம் மற்றும் அனைத்து சமூக சேவைகள் அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு (2026.11.01) இறக்காமம் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அம்பாரை ஆதார வைத்தியசாலை, இரத்த வங்கியில் ஏற்பட்ட குருதி தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் அவர்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக இவ் இரத்த தான முகாம் இறக்காமம் இளைஞர்கள் | Irakkamam Youth அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
அம்பாறை இரத்த வங்கிக்கு வழங்கப்பட்ட இவ் இரத்ததான முகாம் நிகழ்வில், சுமார் 65க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்துக்கள், சத்திரசிகிச்சைகள், பிரசவ அவசரநிலைகள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கு இரத்தம் என்பது வெறுமனே ஒரு மருத்துவத் தேவையல்ல; அது அவர்களின் உயிர் வாழ்வதற்கான நம்பிக்கையாகும்.
இரத்த வங்கிகளில் போதிய இரத்தம் இல்லாத காரணத்தால் ஒரு நோயாளியின் சிகிச்சை பாதிக்கப்படக்கூடாது. அவசரத் தருணத்தில் தேவைப்படும் ஒரு துளி இரத்தம், ஒரு குடும்பத்தின் கண்ணீரைத் துடைக்கவும், ஒரு தாயின் வாழ்வைக் காக்கவும், ஒரு குழந்தைக்கு அதன் பெற்றோரை மீண்டும் பெற்றுத்தரவும் உதவக்கூடும்.
இரத்ததானம் செய்வது உடல் நலமுள்ள ஒருவர் சமூகத்திற்குச் செய்யக்கூடிய மிக உயர்ந்த மனிதநேயப் பணிகளில் ஒன்றாகும். நாம் வழங்கும் இரத்தம் யாருடைய உயிரைக் காப்பாற்றப் போகின்றது என்பது நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அந்த இரத்தத்தின் மூலம் ஒரு உயிர் காப்பாற்றப்படும்போது, அதைவிடப் பெரிய சமூகப் பங்களிப்பு வேறொன்றுமில்லை.
மத நிறுவனங்கள், இளைஞர் அமைப்புகள் மற்றும் உள்ளூராட்சி மன்றம் ஆகியவை ஒன்றிணைந்து முன்னெடுக்கும் இத்தகைய சமூகநலப் பணிகள், சமூக ஒற்றுமைக்கும் மனிதநேயத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றன.
இரத்ததானம் என்பது ஒரு தானம் மட்டுமல்ல; அது மற்றொருவருக்கு வாழ்வதற்கான இரண்டாவது வாய்ப்பை வழங்கும் உன்னதமான மனிதநேயச் செயற்பாடாகும்.
எனவே, உடல்நலத் தகுதிகளைப் பூர்த்தி செய்யும் ஒவ்வொருவரும் இரத்ததானத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இத்தகைய உயிர்காக்கும் பணிகளில் ஆர்வத்துடன் முன்வர வேண்டும் என்பதே இந்நிகழ்வின் ஊடாக விடுக்கப்படும் சமூக விழிப்புணர்வுச் செய்தியாகும்.
உங்கள் இரத்தம்… ஒருவரின் இதயத்தில் மீண்டும் உயிர்த்துடிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்






















0 comments: