🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் துவிச்சக்கர வண்டி தரிப்பிட திறப்பு விழா…!
✍️ எம்.என்.எம்.அப்ராஸ்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………………………………..
✅👉 கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் மாணவர்களின் நலன் கருதி அமைக்கப்பட்ட புதிய துவிச்சக்கர வண்டி தரிப்பிடம் (Bicycle Parking) உத்தியோகபூர்வமாக இன்று(30)
வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் எம்.ஐ.அப்துல் ரசாக் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புத் தலைவருமான ஏ.ஆதம்பாவா பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய துவிச்சக்கர வண்டி தரிப்பிடத்தை (Bicycle Parking) திறந்து வைத்தார்.
நிகழ்வின் ஆரம்பமாக வரவேற்புரையினை பாடசாலை அதிபர் எம்.ஐ.அப்துல் ரசாக் அவர்களும்,மற்றும் சிறப்பு உரையினை பிரதி அதிபர் எம்.வை.சாதிக் நிகழ்த்தினார்.
மேலும் நிகழ்வின் அங்கமாக கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் குண்டு போடுதல் போட்டியில் ஏ.ஹம்தான் அஹமட்
எனும் மாணவன் இரண்டாம் இடம் பெற்று தேசிய மட்ட போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டதையிட்டு கெளரவிக்கப்பட்டதுடன்,அண்மையில் வெளியான புலமை பரிசில்பரீட்சையில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவரான எல். ஏ.எம்.அனாஹித் எனும் மாணவன் இதன் போது கெளரவிக்கப்பட்டார்.
அத்துடன் மாணவர் தலைவர்களுக்கான நியமணக் கடிதங்கள் வழங்குதல் மற்றும் சின்னம் சூட்டும் நிகழ்வும் இதன் போது இடம்பெற்றது.
மேலும் இதன் போது பாடசாலை சமூகத்தினால் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புத் தலைவருமான ஏ.ஆதம்பாவா அவர்கள் பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டார்.
பாடசாலை தேவைப் பாடுகள் அடங்கிய மகஜர் பாராளுமன்ற உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளர் ஏ. எம். ஹில்மி,கல்முனை பிரதேச செயலக பிரிவின் பிரஜா சக்தி தலைவர் ஹலீம் எஸ்.முஹமட்,பிரஜா சக்தி கிராம அலுவலர் பிரிவு தலைவர்களான பாடசாலையின் பழைய மாணவரான பைரூஸ் முகைதீன்,ஏ.ஜி.ஏ.அனஸ்,
ஏ.எம்.தமீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியாக நன்றியுறையினை பாடசாலையின் ஒழுக்காற்றுச் சபைத் தலைவரும் ஆசிரியருமான எஸ்.எம்.சியாத் நிகழ்த்தினார்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்















0 comments: