Sunday, November 8, 2026

கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவன் ஹம்மாத் தேசிய மட்டப் போட்டியில் வரலாற்றுச் சாதனை…!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவன் ஹம்மாத் தேசிய மட்டப் போட்டியில் வரலாற்றுச் சாதனை…!


✍️ எம்.என். எம். அப்ராஸ்


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………


✅👉 விளையாட்டுத்துறை அமைச்சினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் 55ஆவது சேர் ஜோன் டார்பட் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியின் தேசிய மட்டப் போட்டியில் கல்முனை வலயத்தில் உள்ள கமு /கமு / அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவன் ஏ.ஹம்மாத் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.


கொழும்பு, தியகம சர்வதேச விளையாட்டு மைதானத்தில் கடந்த (04) புதன்கிழமை அன்று நடைபெற்ற இப்போட்டியில்,14 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் குண்டு எறிதல் (Shot Put) நிகழ்ச்சியில் பங்குபற்றிய கமு /கமு / அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலய பாடசாலை மாணவன் ஏ.ஹம்மாத், 12.32 மீட்டர் தூரத்திற்கு குண்டினை எறிந்து, 62 போட்டியாளர்களில் சிறந்த எட்டு வீரர்களில் ஒருவராக (Best Eight) தெரிவு செய்யப்பட்டு சாதனையை நிலைநாட்டியுள்ளார்.


மேலும், இம்மாணவனைப் பயிற்றுவித்து வழிப்படுத்திய உடற்கல்வி ஆசிரியர் எம். ஏ. ஹம்சார், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களான ஏ.ஜே. எம்.ஸாபித் எம்.ஜே.முபீத் அவர்களுக்கும், பாடசாலையின் அதிபர் எம்.ஐ.அப்துல் ரஸாக், பிரதி அதிபர் எம். வை.எம்.சாதிக், உதவி அதிபர் இசட் .டி.சியாம் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.


சாதனை மாணவன் ஏ.ஹம்மாத், கல்முனையைச் சேர்ந்த அன்சார் மற்றும் சனூன் தம்பதியினரின் புதல்வராவார்.


தேசிய மட்டத்தில் பல பாடசாலைகளின் திறமையான வீரர்களுடன் போட்டியிட்டு பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ள இம்மாணவனின் சாதனை பாராட்டுக்குரியதாகும்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: