Sunday, November 1, 2026

சம்மாந்துறையின் அபிவிருத்தித் தேவைகளை நிறைவேற்ற அதிகாரிகள் மட்டத்தில் நடவடிக்கை…!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 சம்மாந்துறையின் அபிவிருத்தித் தேவைகளை நிறைவேற்ற அதிகாரிகள் மட்டத்தில் நடவடிக்கை…!


✍️ கூட்ட வளாகத்திலிருந்து - ஜலீல் ஜீ 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………….


✅👉 சம்மாந்துறை பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் விவசாயிகளின் நலன் தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம், கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா தலைமையில் சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு அரங்கு கட்டிட தொகுதியில் 2026.10.27ஆம் திகதி நடைபெற்றது.


சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல். முஹம்மது ஹனிபா, சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், அம்பாறை மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ஏ.எல். மஹ்ரூப், சம்மாந்துறை பிரதேச உப செயலாளர் பீ. பாசித் அகமட், பிரதேச செயலக கணக்காளர் எஸ்.எல். சத்தார் மிர்ஸா மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இதன்போது, சம்மாந்துறை பிரதேசத்தின் அபிவிருத்தி, விவசாயிகளின் நலன் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பாகப் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.


இதன்படி, 25,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் வேளாண்மைச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் நலனைக் கருத்திற்கொண்டு, சம்மாந்துறை வீரமுனை 04ஆம் கிராம சேவகர் பிரிவில் தற்போதுள்ள நெற்களஞ்சியசாலைக்கு அண்மையில் புதிய நெற்களஞ்சியசாலையொன்றை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், பழைமையானதும் சிதைவடைந்த நிலையிலுள்ளதுமான பல்லாத்துப் பாலத்தை விரைவாகப் புனரமைத்து, புதிய பாலமாக அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் திருத்த வேலைகள் நடைபெற்று வருவதால், அல்-மர்ஜான் பாடசாலையின் ஆராதனை மண்டபத்தைத் பாடசாலை கல்வி அபிவிருத்தி குழு முடிவுகளுடன் தற்காலிகமாகப் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்குவது தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டது.


அத்துடன், 2027ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், விவசாயிகளின் நலனைக் கருத்திற்கொண்டு 400 மில்லியன் ரூபா செலவில் வளத்தாப்பிட்டி குளத்தைப் புனரமைப்பதற்கும், 100 மில்லியன் ரூபா செலவில் குருணல் கஞ்சி அணைக்கட்டை புதிய அணைக்கட்டாக அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டது.

மேலும், கல்லரிச்சல் 1 மற்றும் 2ஆம் கிராம சேவகர் பிரிவுகளில் அமைந்துள்ள S/29 வாய்க்கால் வீதியில், கொருக்காய்ப்புலியற்ற சந்தையிலிருந்து முஸ்தக்கீன் பள்ளிவாசல் வரையான சுமார் 400 மீற்றர் தூரப் பகுதியில் வடிகால் அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.


இக்கூட்டத்தில் சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள சகல திணைக்களங்களினதும் தலைவர்கள் மற்றும் உயரதிகாரிகள், முப்படையினர், பொலிஸ் பொறுப்பதிகாரிகள், சம்மாந்துறை மஜ்லிஸ் அஷுறா பிரதிநிதிகள், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் பிரதம நம்பிக்கையாளர் எம்.எல்.அப்துல் மஜீட் (சத்தார்), செயலாளர் ஹ எம்.ஐ. இஸ்ஹாக் ,பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவின் செயலாளர் வீ ஏ . ஜெசீல், பாராளுமன்ற உறுப்பினர் தாஹிர் செயலாளர் - எஸ். முஹம்மட் அலி ஜின்னா(ஆசிரியர்), சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பிநாட்களான நபாஷ், கபூர்,ஜெயசந்திரன், அப்னான்,காலித், நயிம் (ஆசிரியர்), நளிம், ஹாதிக் இப்ராஹிம் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்









SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: