Saturday, October 3, 2026

கல்முனை பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர்: இலச்சினை, பாடல் மற்றும் அணிகள் அறிமுக விழா கோலாகலம்…!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 கல்முனை பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர்: இலச்சினை, பாடல் மற்றும் அணிகள் அறிமுக விழா கோலாகலம்…!


✅👉 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………………………..


✅👉 கல்முனை பிராந்திய கிரிக்கெட் வரலாற்றில் கடின பந்து (Leather ball) போட்டிகளின் புதிய பரிமாணமாகக் கருதப்படும் 'கல்முனை பிரீமியர் லீக்' (Kalmunai Premier League - KPL) கிரிக்கெட் தொடருக்கான உத்தியோகபூர்வ அறிமுக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.


கல்முனையில் இயங்கிவரும் பல்வேறு விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த திறமைமிக்க வீரர்களை உள்ளடக்கி மொத்தம் 5 அணிகள் உருவாக்கப்பட்டு இத்தொடர் நடாத்தப்படவுள்ளது.


வரலாற்றுச் சிறப்புமிக்க இக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இத்தொடரை முன்னிட்டு, போட்டியின் அதிகாரப்பூர்வ இலச்சினை (Logo), தொடரைச் சிறப்பிக்கும் உத்தியோகபூர்வ தீம் பாடல் (Theme Song) மற்றும் களமிறங்கும் 5 அணிகளின் பெயர்கள், அவற்றின் இலச்சினைகள் என்பன இந்நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டன.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கல்முனைப் பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் லசந்த களுவாராச்சி கலந்து சிறப்பித்தார்.

மேலும் கௌரவ அதிதிகளாகப் பொறியியலாளர் ரிஸ்கான், அம்பாறை மாவட்டத் உதைப்பந்தாட்ட சங்கத் தலைவர் எம்.ஐ.எம். மனாப், கல்முனை முஹையத்தீன் ஜும்ஆ பள்ளிவாசல் பிரதித் தலைவர் ஐ.எல்.ஏ. அப்துல் அஸீஸ், கல்முனை லெஜண்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் பிரதித் தலைவர் எம்.எச்.ஏ. அப்துல் கரீம், அதன் பொருளாளர் என்.எம்.எம். றுஸ்தி ஆகியோர் உற்பட பல்வேறு விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள், முக்கிய விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.


பிராந்திய மட்டத்திலான கிரிக்கெட் வீரர்களின் விளையாட்டுத் திறன்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத்தொடர், பிரதேச விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்










SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: