📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 இறக்காமம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்ற குறும்படம் மற்றும் நாடகப் பயிலரங்கு…!
✍️ ஏ.எச்.றகீப்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………………
✅👉 கிழக்கு மாகாண கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் PSDG திட்டத்தின் கீழ், இறக்காமம் பிரதேச செயலகத்தின் கலாசாரப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘குறும்படம் மற்றும் நாடகப் பயிலரங்கு – 2026’ ஆனது 2026.10.07 புதன்கிழமை கமு/சது/அல்-அஷ்ரப் மத்திய கல்லூரி (தே. பா) இல் சிறப்பாக நடைபெற்றது.
பிரதேச செயலாளர் அஷ்-ஷெய்க் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், உதவிப் பிரதேச செயலாளர் அய்மா நிஃமத்துல்லா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை கமு/சது/அல்-அஷ்ரப் மத்திய கல்லூரி (தே. பா) அதிபர் ஏ.ஆர்.எம். அமீன் அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார்.
பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஏ. டபிள்யூ. நாளிகா தமயந்தி அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் வளவாளராக நாடகமும் அரங்கியலும் சிரேஷ்ட ஆசிரியர் என்.நந்தகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மேலும், பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி ஏ. எச். நதீறா, பிரதேச செயலகத்தின் உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப், கலாசார உத்தியோகத்தர் எம்.ஏ. நஹ்பீஸா, அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். றினோஸா, முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம். இம்டாட், ஆசிரியர்களான எஸ்.எல்.எம். குத்தூஸ் ( இணைப்பாடவிதான பொறுப்பாசிரியார்) , ஐ. றபீக் (பிரிவுத் தலைவர்) , எம்.ஐ. இல்மி (ஆலோசனை வழிகாட்டல்), டி. றிஸ்வானா (பொறுப்பாசிரியை) உள்ளிட்டோரும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
இப்பயிற்சி நெறியானது, பாடசாலை மாணவர்களின் கலை, நாடகக் கலை, குறும்படத் தயாரிப்பு மற்றும் மேடை வெளிப்பாடுகள் தொடர்பான அறிவு, திறன் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்துவதாக அமைந்திருந்தது.
பயிலரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு குறும்படம் மற்றும் நாடகத் தயாரிப்பின் அடிப்படைகள், கதை உருவாக்கம், கதாபாத்திர வடிவமைப்பு, நடிப்பு, உரையாடல், காட்சியமைப்பு மற்றும் கலை வெளிப்பாட்டின் பல்வேறு அம்சங்கள் தொடர்பில் பயிற்சிகள் மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. ஆர்வத்துடன் செயற்பாடுகளில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களது படைப்பாற்றல் மற்றும் கலைத்திறன்களையும் இதன்போது வெளிப்படுத்தினார்கள்.
அத்தோடு, நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் விருதுகளை வென்ற குறுந்திரைப்படங்களும் மாணவர்களுக்குத் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டன.
நிகழ்வின் நிறைவில், பயிலரங்கில் பங்கேற்ற மாணவர்களின் பெறுமதிமிக்க பங்கேற்பு மற்றும் ஆர்வம் என்பவற்றை அங்கீகரிக்கும் வகையில் பங்கேற்புச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
குறும்படம் மற்றும் நாடகக் கலையின் ஊடாக இளம் தலைமுறையினரின் படைப்பாற்றல், சமூக விழிப்புணர்வு மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் ஆர்வத்தை வளர்ப்பதற்கான முக்கியமான முயற்சியாக இப்பயிலரங்கு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்














0 comments: