Friday, October 23, 2026

திவியட்ட சவிய மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான' வீட்டுத்திட்டத்தின் கீழ் இறக்காமத்தில் புதிய வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது…!

Ad 728x90


 🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉‘திவியட்ட சவிய மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான' வீட்டுத்திட்டத்தின் கீழ் இறக்காமத்தில் புதிய வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது…!


✍️இறக்காமம் செய்தியாளர்


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………….


✅👉 இலங்கை அரசாங்கத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘திவியட்ட சவியக்’ (Diviyata Saviyak) வீட்டுத்திட்டத்தின் கீழ், இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பயனாளிகளுக்கு 02 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 2026 ஒக்டோபர் 19ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.


இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம். எஸ். எம். றஸ்ஸான் (நளீமி) அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் கீழ், பிரதேச செயலகத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவு மற்றும் சமூக சேவைப் பிரிவு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இத்திட்டத்தின் பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு, வீடமைப்பு உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.


பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் வாழும் குடும்பங்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இவ்வாறான வீட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.


திவியட்ட சவியக்’ வீட்டுத்திட்டம், வீட்டுவசதியற்ற மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களுக்குப் பாதுகாப்பான வாழ்விடத்தை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், அவர்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் ஒரு முக்கியமான நலன்புரித் திட்டமாகும். இத் திட்டம் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் பி. யசோதா அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்று வருகிறது. 


அதேவேளை, மாற்றுத்திறனாளிகளுக்கான ரூ. 10,00000 வீட்டு உதவிக்கான அடிக்கல் நடும் நிகழ்வும் இடம்பெற்றது. கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளின் வீட்டு வசதிகளை மேம்படுத்தி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டு வசதி உதவித் திட்டத்தின் கீழ் இவ்வுதவி வழங்கப்பட்டது.


சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.எம். முஹைதீன் அவர்களின் ஒருங்கிணைப்பில் கீழ் இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.


இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம். எஸ். எம். றஸ்ஸான் (நளீமி) அவர்களின் தலைமையில் இவ் அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது. 


பிரதேச சபை உறுப்பினர் ஏ. மர்சூக், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே. எல். ஹம்சார், தேசிய மக்கள் சக்தியின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் ஏ. எல். அலி சப்றி சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டனர். 


 மேலும் இந்நிகழ்வில், கிராம உத்தியோகத்தர் ஏ. எல். ஹூசைன், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் ஏ. எச். முஹம்மட் றஜீப், உளவள உத்தியோகத்தர் ஏ. எச். றகீப்,

மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். எம். கே. சாஜிதா, சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம். ஐ. பஸீனா உட்பட பிரஜா சக்தி உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.


🌎 www.mihrajnews.com


✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்






SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: