Monday, September 28, 2026

நள்ளிரவிலும் தொடரும் வீதி திருத்தப் பணி - ஹிஸ்புல்லாஹ் எம்.பி களத்தில்..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 நள்ளிரவிலும் தொடரும் வீதி திருத்தப் பணி - ஹிஸ்புல்லாஹ் எம்.பி களத்தில்..!


✅👉 காத்தான்குடி C.B. காசீம் சந்தி – டாக்டர் பதியுதீன் மஹ்மூத் மாவத்தை (Beach Road) திருத்தப் பணிகள் தீவிரம்…!


✍️ எஸ். சினீஸ் கான்


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………………


✅👉 பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக, காத்தான்குடி C.B. காசீம் சந்தி — டாக்டர் பதியுதீன் மஹ்மூத் மாவத்தை (Beach Road) திருத்தம் மற்றும் புனர்நிர்மாணப் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியினால், வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் இவ்வீதியின் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


குறித்த வீதிப் பணிகளை மிக அவசரமாக நிறைவு செய்து, பொதுமக்களின் போக்குவரத்திற்கு விரைவாக வீதியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில், கடைகள் மூடப்பட்டு பொதுமக்களின் போக்குவரத்து குறைவாகக் காணப்படும் இரவு நேரத்திலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


இதனையடுத்து, குறித்த பணிகளின் முன்னேற்றத்தை நேரில் பார்வையிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தற்போது உரிய இடத்திற்கு விஜயம் செய்தார்.


இதன்போது, வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடிய அவர், பணிகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்நோக்கும் விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்ததுடன், பொதுமக்களின் போக்குவரத்திற்கு ஏற்படும் சிரமங்களை கருத்திற்கொண்டு, பணிகளை மிக விரைவாகவும் தரமாகவும் நிறைவு செய்யுமாறு ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினார்.


பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் முக்கியமான வீதியாக இது காணப்படுவதால், வீதிப் புனர்நிர்மாணப் பணிகளை தாமதமின்றி நிறைவு செய்து, மக்கள் சிரமமின்றி பயன்படுத்தக்கூடிய வகையில் வீதியை விரைவில் செப்பனிட்டு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார்.


மேலும், நகர சபையின் உதவிகள் தேவைப்பட்டால் உடனடியாக வழங்குமாறும் நகர சபை தவிசாளருக்கு ஆலோசனை வழங்கினார்.


இதன்போது, காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம் அஸ்பர், நகர சபை உறுப்பினர் இ.எம் றுஸ்வின், பொறுப்பான உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் உடனிருந்தனர்.


-- ஊடகப்பிரிவு

27-09-2026


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ  எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்





SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: