📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 மனிதநேயத்தின் உயிர்ப்புடன் – கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் இருசக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வு…!
✍️ எம்.சி.எம்.ஷம்சுல் முனா
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………….
✅👉 கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் மற்றும் YWMA பேரவை இணைந்து முன்னெடுத்த அர்த்தமிக்க மனிதநேயச் செயற்பாட்டின் ஒரு பகுதியாக, நீண்டகாலமாக உடல் சவால்களை எதிர்கொண்டு வரும் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த சிறப்புத் தேவையுடைய பயனாளி ஒருவருக்கு இருசக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்த இருசக்கர நாற்காலியானது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் அன்புத் தாயார் சுஹாரா மன்சூர் அவர்களின் பொற்கரங்களால் பயனாளிக்கு வழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் எதிர்கொள்ளும் சமூக மற்றும் பொருளாதார சவால்களைப் புரிந்துகொண்டு, சமூக நலனுக்காக தன்னலமின்றி பல்வேறு மனிதநேயப் பணிகளை முன்னெடுத்து வரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன், தேவையுடைய மக்களுக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகின்றது.
இந்நிகழ்வில் பயனாளியின் குடும்பத்தினர், ரஹ்மத் பவுண்டேஷன் மற்றும் YWMA உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இத்தகைய மனிதநேயப் பணிகள் சமூகத்தில் அன்பு, பரிவு, ஒற்றுமை மற்றும் ஒருவருக்கொருவர் துணைநிற்கும் மனப்பான்மையை மேலும் வலுப்படுத்துகின்றன.
சமூக சவால்கள் அதிகரித்து வரும் இக்கட்டான சூழலிலும், “மனிதநேயம் முதன்மை” என்ற உயரிய கொள்கையுடன் முன்னெடுக்கப்படும் இத்தகைய செயற்பாடுகள், மனிதநேய சமூகத்தின் அழகிய பிரதிபலிப்பாகத் திகழ்கின்றன.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்














0 comments: