Sunday, September 13, 2026

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு : 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி…!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு : 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி…!


✍️ மாளிகைக்காடு செய்தியாளர் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………………..


✅👉 கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 2026ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற 29 மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.


பாடசாலை உதவி அதிபர் எம்.எச்.ஐ. இஸ்ஸத் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பாடசாலை அதிபர் எஸ்.எம்.எம். றிஸானா தலைமை தாங்கினார்.


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எச்.எம். நிஜாம் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதியாக அல்-மீஸான் பௌண்டஷன் – ஸ்ரீலங்கா தவிசாளர் நூருல் ஹுதா உமர் கலந்து கொண்டார்.


கல்முனை கல்வி வலயத்தில் சிறப்பான பெறுபேற்றை பதிவு செய்த இப்பாடசாலை, இவ்வாண்டு 96 சதவீத சித்தியை பெற்றுள்ளதுடன், 136 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.


சாதனை மாணவர்களைப் பாராட்டும் வகையில் அவர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களின் பெறுபேற்றுக்கு அர்ப்பணிப்புடன் பங்களித்த ஆசிரியர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி பாராட்டப்பட்டது.


இதன்போது பிரதம அதிதி, கௌரவ அதிதி உள்ளிட்ட அதிதிகள் மாணவர்களின் கல்வி முன்னேற்றம், கல்வியின் முக்கியத்துவம் மற்றும் எதிர்காலத்தில் சிறந்த அடைவுகளை நோக்கி மாணவர்கள் பயணிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் கருத்துரைகளை வழங்கினர்.


நிகழ்வில் பாடசாலையின் உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
















SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: