📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 ரஹ்மத் பவுண்டேசன் மூலம் பாலமுனை பிரதேசத்தில் பொதுக்கிணறு அன்பளிப்பு…!
✍️ எம்.சி.எம்.ஷம்சுல் முனா
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………….
✅👉 சமீபகாலமாக நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் நீர்க்கட்டணங்களால் அசெளகரியங்களுக்கு உள்ளாகி வந்த பாலமுனை பிரதேச மக்களின் தேவையை உணர்ந்து, மிகவும் தேவையுடைய பயனாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான பொதுக்கிணறு ஒன்று கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் அனுசரணையில் அமைத்து வழங்கி வைக்கப்பட்டது.
கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் பணிப்புரையின் பேரில், குறுகிய காலத்திலேயே இப்பொதுக்கிணறு நிர்மாணிக்கப்பட்டு இன்று மக்களின் பாவனைக்காக திறந்து கையளிக்கப்பட்டது.
மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் சமூக நலப் பணிகளில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் ரஹ்மத் பவுண்டேசனின் இந்நிகழ்வு, அப்பிரதேச மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்கள், பயனாளர்கள், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயலாளர் AC. சமால்தீன், பிரதேசவாசிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
“மக்களின் தேவையை உணர்ந்து செயற்படுவது தான் உண்மையான சமூக சேவை” என்பதற்கு ரஹ்மத் பவுண்டேசன் மீண்டும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்








0 comments: