📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 ரஹ்மத் பவுண்டேசன் மூலம் கல்முனை பிரதேச மீனவர் சங்கத்திற்கு குழாய்க்கிணறு அன்பளிப்பு…!
✍️ எம்.சி.எம்.ஷம்சுல் முனா
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………
✅👉 கல்முனை பிரதேசத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை எதிர்கொண்டு வரும் மீனவர் சமூகத்தின் அன்றாட வாழ்வாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் முன்னெடுத்து வரும் சமூகநலத் திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட மீனவர் சங்கத்திற்கு குழாய்க்கிணறு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
கடற்றொழிலை தமது பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வரும் மீனவர்களுக்கு சுத்தமான நீர் என்பது குடிநீருக்காக மட்டுமன்றி, மீன்பிடி உபகரணங்களை சுத்தம் செய்தல், மீன்களை கையாளுதல் மற்றும் பதப்படுத்துதல், படகுகள் மற்றும் வலைகளை பராமரித்தல், தொழில் நடவடிக்கைகளுக்குப் பின்னர் கைகளைவும் உடலையும் சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அன்றாடத் தேவைகளுக்கும் இன்றியமையாததாகும்.
நீண்டகாலமாக போதிய நீர் வசதியின்றி சிரமங்களை எதிர்கொண்டு வந்த மீனவர் சமூகத்தின் தேவையை கருத்திற்கொண்டு, ரஹ்மத் பவுண்டேசனின் அனுசரணையில், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் ஏற்பாட்டில், குறுகிய காலத்திற்குள் இக்குழாய்க்கிணறு அமைக்கப்பட்டு, பயனாளிகளின் பாவனைக்காக திறந்து கையளிக்கப்பட்டது.
இக்குழாய்க்கிணறு மூலம் மீனவர் சங்க உறுப்பினர்கள் மட்டுமன்றி, குறித்த பகுதியில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் தேவையுடைய பிரதேசவாசிகளும் பயனடையக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, தினசரி கடற்றொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் தொழில் முடிந்து கரை திரும்பிய பின்னர் தங்களையும், தங்களது மீன்பிடி உபகரணங்களையும் சுத்தம் செய்வதற்கும், மீன்களை சுகாதாரமான முறையில் கையாள்வதற்கும் இந்த நீர்வசதி பெரும் உதவியாக அமையும். இதன் மூலம் சுகாதாரம், தூய்மை மற்றும் மீன்வளத் தொழிலின் தரத்தை மேம்படுத்துவதற்கும் பங்களிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை குறைவதுடன், அவசரத் தேவைகளின்போது அருகிலேயே நீரைப் பெற்றுக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்கள், குறித்த மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள்,இப்பிரதேச சமூக சேவையாளர்கள்,பயனாளிகள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.
“மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து, அவற்றை இயன்றளவு நிவர்த்தி செய்வதே சமூகப் பணியின் உண்மையான நோக்கம்” என்ற அடிப்படையில், ரஹ்மத் பவுண்டேசன் முன்னெடுத்து வரும் இத்தகைய சமூகநலப் பணிகள், கல்முனை பிரதேசத்தில் தேவையுடைய மக்களின் வாழ்வில் பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்





0 comments: