Saturday, July 4, 2026

காத்தான்குடியின் எதிர்கால வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள்: ஹிஸ்புல்லாஹ் MP கள ஆய்வு..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 காத்தான்குடியின் எதிர்கால வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள்: ஹிஸ்புல்லாஹ் MP கள ஆய்வு..!


✍️ எஸ். சினீஸ் கான் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………..


✅👉 காத்தான்குடி நகருக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், பல்வேறு புதிய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நேரடி கள ஆய்வும் கலந்துரையாடலும் நேற்று (03) நடைபெற்றது.


பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கள ஆய்வில், "ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தை" மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.


இதன்படி, சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், நகருக்கு வருகை தரும் பயணிகள் மற்றும் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக பிரதான வீதியை பயன்படுத்துவோருக்கு ஏற்படும் வாகன நெரிசலைக் குறைத்தல், மேலும் பிரதான வீதியில் நிலவும் வாகன நிறுத்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக ஒழுங்குமுறையான வாகன நிறுத்துமிடத்தை (Parking) அமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.


இந்த அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் காத்தான்குடியின் நகர அழகு மேம்படுத்தப்படுவதோடு, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கவும், உள்ளூர் வர்த்தக நடவடிக்கைகள் மேலும் ஊக்கமடையவும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இக்கள ஆய்வில், காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர், பிரதி நகர முதல்வர் எம்.ஐ.எம். ஜெஸீம், நகர சபை உறுப்பினர்களான பொறியியலாளர் ரியாஸ் மஹ்மூத், இ.எம். றுஸ்வின் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


-ஊடகப்பிரிவு


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்




SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: