🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 கல்முனை கிரின் பீல்ட் வீட்டுத்திட்ட புதிய முகாமைத்துவக் குழுவினர் ரஹ்மத் மன்சூரை சந்தித்து கௌரவிப்பு..!
✍️ Mcm.Samsul Muna
Journalist
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………
✅👉 கல்முனை கிரின் பீல்ட் வீட்டுத்திட்டத்தின் புதிய முகாமைத்துவக் குழுவினர் (Condominium Management Committee), அப்பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் கழிவுப் பொருள் முகாமைத்துவப் பிரச்சினை, சுகாதாரச் சவால்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில், முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களை (27) சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்தனர்.
இதன்போது, புதிய முகாமைத்துவக் குழுவின் எதிர்கால செயற்திட்டங்கள், நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தும் வழிமுறைகள், குடியிருப்பாளர்களின் தேவைகள் மற்றும் குறைகளை முறையாகக் கண்டறிந்து தீர்வு காணும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன், வீட்டுத்திட்டத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சுகாதாரமான மற்றும் தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்குதல், கழிவுப் பொருள் முகாமைத்துவத்தை முறையாக நடைமுறைப்படுத்துதல், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான சிறந்த கல்விச் சூழலை உருவாக்குதல், பொதுமக்களின் நலன் சார்ந்த பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வது உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பிலும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும், கல்முனை கிரின் பீல்ட் பகுதியில் பள்ளிவாசல் நிர்மாணத்திற்காக ரஹ்மத் மன்சூர் அவர்கள் வழங்கிய அர்ப்பணிப்பான பங்களிப்பையும், சமூக நலன் சார்ந்த தொடர்ச்சியான சேவைகளையும் உயர்வாகப் பாராட்டிய புதிய முகாமைத்துவக் குழுவினர், அவருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவம் செலுத்தினர்.
அவரது சமூக, கல்வி மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பான பணிகள் தொடர்ந்தும் சமூகத்திற்கு வழிகாட்டியாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட குழுவினர், தங்களது நன்றியையும் பாராட்டையும் வெளிப்படுத்தி புதிய நிர்வாகத்தின் சார்பில் அவரை சிறப்பாக கௌரவித்தனர்.
இச்சந்திப்பில் கல்முனை கிரின் பீல்ட் வீட்டுத்திட்டத்தின் புதிய முகாமைத்துவக் குழுவின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட அனைத்து நிர்வாக உறுப்பினர்களும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் முக்கிய உறுப்பினர்களும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்






0 comments: