Thursday, July 23, 2026

சாய்ந்தமருது றியாலுல் ஜன்னாஹ் பாடசாலையின் விசேட தேவை உடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணப் பொதிகள் வழங்கி வைப்பு..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 சாய்ந்தமருது றியாலுல் ஜன்னாஹ் பாடசாலையின் விசேட தேவை உடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணப் பொதிகள் வழங்கி வைப்பு..!


✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்

நிருபர்


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………..


✅👉 விசேட தேவை உடைய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தையும் தன்னம்பிக்கையையும் ஊக்குவிக்கும் நோக்கில், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டிலும் YWMA அமைப்பின் அனுசரணையிலும், சாய்ந்தமருது றியாலுல் ஜன்னாஹ் பாடசாலையில் கல்விக்குத் தேவையான கற்றல் உபகரணப் பொதிகளும் மதிய உணவும் வழங்கி வைக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.


பாடசாலையின் அதிபர் M.A. அஸ்தர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கல்முனை முன்னாள் மாநகர பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு கற்றல் பொதிகளை வழங்கி அவர்களை ஊக்குவித்தார்.


இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக YWMA அமைப்பின் தலைவி பாவாசா தாஹா அவர்களும், YWMA அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். மேலும், கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் விசேட கல்வி ஆசிரிய ஆலோசகர் M.M. சியாம், கல்முனை வலயக் கல்வி ஆரம்பநிலை ஆசிரிய ஆலோசகரும் றியாலுல் ஜன்னாஹ் பாடசாலையின் EPSI இணைப்பாளருமான S.M.M. அன்சார், உதவி அதிபர் சபினா, SDEC செயலாளர் M.I.M. காலித், PPP செயலாளர் U.K. கால்டீன், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


விசேட தேவை உடைய மாணவர்களின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்களித்து வரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனும் YWMA அமைப்பும் முன்னெடுத்து வரும் இத்தகைய மனிதநேயச் செயற்பாடுகள், சமூக அக்கறை மற்றும் கல்விசார் பொறுப்புணர்வின் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்



























SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: