Saturday, July 18, 2026

இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வகுப்பறை அழகுபடுத்தல் போட்டி பரிசளிப்பு விழா..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வகுப்பறை அழகுபடுத்தல் போட்டி பரிசளிப்பு விழா..!


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………


✅👉 கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வகுப்பறை அழகுபடுத்தல் போட்டி பரிசளிப்பு விழா இன்று (17) காலை பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.


பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை கல்வி வலயத்தின் ஸ்தாபன மற்றும் பொது நிர்வாக பிரதிக்கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வகுப்புகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.


இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளரும், காரைதீவு பிரதேச கோட்டக்கல்வி பணிப்பாளருமான ஏ. சஞ்சீவன் அவர்கள் கௌரவ அதிதியாகவும், ஆசிரிய ஆலோசகர் எம்.எம். சியாம், கல்விப் பணிமனைக்கான பாடசாலை இணைப்பாளர் வி. தையூப் மற்றும் ஆசிரிய ஆலோசகர் ஐ.எம். மவ்சூர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.


மாணவர்களிடையே சுத்தம், ஒழுங்கு, பொறுப்புணர்வு, படைப்பாற்றல் மற்றும் கற்றலுக்கு ஏற்ற வகுப்பறைச் சூழலை உருவாக்கும் நோக்கில் நடத்தப்பட்ட வகுப்பறை அழகுபடுத்தல் போட்டியில் வெற்றி பெற்ற வகுப்புகளுக்கு இந்நிகழ்வில் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. முதலிடத்தை தரம் 10 பெற்றுக் கொண்டதுடன் இரண்டாம் இடத்தை தரம் 11ம் மூன்றாம் இடத்தை தரம் 06ம் பெற்றுக்கொண்டது. 


நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புப் பொறுப்புகளை எம்.சி. ஹிஜாஸ் மற்றும் ஏ.ஆர். பைரூஸ்கான் ஆகியோர் திறம்பட மேற்கொண்டிருந்தனர்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்








SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: