🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 “Multi Media Projector “ வழங்கும் நிகழ்வு..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………..
✅👉 கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு Multi Media Projector வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலையிலன் அதிபர் திரு
ஏ.ஜீ.எம்.றிசாத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மேலும் பாடசாலையின் நீண்டகாலத் தேவையாக இருந்து வந்த Multi Media Projector ஐ சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றும் பொறியியலாளர் திரு. அன்வர் சமீர் அவர்கள் பாடசாலையின் அதிபர் திரு
ஏ.ஜீ.எம்.றிசாத் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க DP education நிறுவனத்தின் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் இணைப்பாளர் திரு.எம்.ஜே. மறூஸ் மற்றும் இளைஞர் சேவை அதிகாரி திரு.எம்.எம்.சமீறுல் இலாஹி ஆகியோரின் முயற்சியினாலும் இந்த " Multi Media Projector"கிடைக்கப்பெற்றது.
இதனை மாணவர்களின் பயன்பாட்டிற்காக இன்று 2026.06.03ம் திகதி அதிபரிடம் கையளித்தனர்.
இந்நிகழ்வில் அதிபர் அவர்கள் உரையாற்றும்போது தனது வேண்டுகோளை ஏற்று மாணவர்களின் நலன் கருதி அவர்களின் கற்றல் விருத்திக்காக தனது சொந்த நிதியில் இதனை வழங்கி உதவிய பொறியியலாளர் அன்வர் சமீர் அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்








0 comments: