📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 கமு / கமு அஸ்-ஸுஹரா பாடசாலையினது சுற்றுச் சூழலை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்..!
✍️ யு.எல். அலி. ஜமாயில்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………….
✅👉 அஸ்-ஸுஹரா பாடசாலையினது பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினது (SDEC) முன்னெடுப்பில், பாடசாலையினது சுற்று மதில் (External and internal boundary wall), பிரதான முகப்பு (Main entrance decoration) மற்றும் விழிப்புணர்வு ஓவியங்கள் (Awareness murals) வரைந்து அழகுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வேலைத்திட்டத்தின் மூலம் பாடசாலையினது சுற்றுப்புறச் சூழலை மேலும் கவர்ச்சிகரமாகவும், ஒழுங்குமுறையுடனும், மாணவர்களுக்கு உகந்ததாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
குறிப்பாக, சுற்று மதில்களுக்கு புதிய வண்ணப்பூச்சு பூசுதல், பிரதான நுழைவாயிலை அழகுபடுத்துதல் மற்றும் கல்வி, ஒழுக்கம், சுகாதாரம் போன்ற விடயங்களை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு ஓவியங்களை வரைவது ஆகிய பணிகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இவ்வேலைத்திட்டத்தின் மூலம் மாணவச்செல்வங்களுக்கான சுத்தமான, பாதுகாப்பான மற்றும் கற்றலுக்கு ஏற்ற கல்விச் சூழல் உருவாக்கப்படுவதுடன், பாடசாலை சமூகத்தினது பாராட்டையும் நன்மதிப்பையும் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்







0 comments: