Saturday, June 27, 2026

கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆய்வுகூடம் திறந்து வைப்பு..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆய்வுகூடம் திறந்து வைப்பு..!


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………..


✅👉 கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு மைல்கல் நிகழ்வாகவும் நீண்டகாலக் கனவாகவும் இருந்த விஞ்ஞான ஆய்வுகூடம் 2026.06.26 ஆம் திகதி மிக கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.


இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்கு வித்திட்டவர், பாடசாலையின் அதிபர் திரு. 

ஏ.ஜி.எம். றிஷாத் அவர்கள் என்றால் அது மிகையாகாது. அதிபரின் அயராத முயற்சியும், தொலைநோக்குப் பார்வையும், அர்ப்பணிப்புமிக்க வழிநடாத்துதலுமே இந்தக் கனவை நனவாக்கியதன் பின்னணியாக அமைந்துள்ளது என்று பெருமிதத்துடன் குறிப்பிடலாம்.


பாடசாலை அதிபர் திரு.ஏ.ஜி.எம். றிஷாத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் திருமதி. எம்.எச்.றியாஸா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு விஞ்ஞான ஆய்வுகூடத்தைத் திறந்து வைத்தார்.


மேலும், இந்நிகழ்வில் விஞ்ஞானப் பாட ஆசிரிய ஆலோசகர் திரு.ஏ.ஜீ.எம்.ஜுலூல் மற்றும் பகுதித் தலைவர் திருமதி. ZM.நூறுல் அமீன், 

விஞ்ஞானப் பாட ஆசிரியை திருமதி மஜீட், அவர்கள் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.


ஆய்வுகூடத்திற்கான நவீன உபகரணங்களை வழங்கி அதன் உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருந்த பிரதி பிராந்திய சுகாதாரப் பணிமனை( RDHS )யின் திட்டமிடல் பணிப்பாளர் டாக்டர் எம்.சி.எம். மாஹிர் அவர்களுக்கும், அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் றிபாஸ் அவர்களுக்கும் அத்தோடு அட்டாளைச்சேனை மற்றும் மட்டக்களப்பு கல்வியியற் கல்லூரிகளின் கட்டுறுப் பயிற்சி ஆசிரிய பயிலுனர்களான MSM. HABSAN 

MM. MAFSHAN

JH. RILA

AHM. SHIMANN. 

Katheeza Ummah

ASF. Riska

போன்றோரின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. 


இதில் பாடசாலை மாணவர்களின் சுய ஆக்கங்களும் இந்த திறப்பு விழாவை மேலும் மெருகூட்டின என்பது குறிப்பிடத்தக்கது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


















SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: