Tuesday, May 5, 2026

அரச பாடசாலைகளில் பதில் அதிபர்கள் பிரச்சினை: ஜனாதிபதியிடம் தீர்வு கோரி வேண்டுகோள்..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰


✅👉 அரச பாடசாலைகளில் பதில் அதிபர்கள் பிரச்சினை: ஜனாதிபதியிடம் தீர்வு கோரி வேண்டுகோள்..!


✍️ நூருல் ஹுதா உமர் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………


✅👉 அரச பாடசாலைகளில் நீண்டகாலமாக கடமையாற்றி வரும் பதில் அதிபர்கள் தங்களது சேவை நிலை தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களிடம் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


2026 ஏப்ரல் 27ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்களில், தற்காலிக, நாளாந்த, பதிலீடு, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் சேவையில் உள்ள சுமார் 9,800 அரசு ஊழியர்களை நிரந்தரமாக்கும் முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இதனை முன்னிறுத்தி, அதே கொள்கையின் அடிப்படையில் பதில் அதிபர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பதில் அதிபர்கள் தெரிவித்ததாவது, 2012ஆம் ஆண்டிற்கு பின்னர் தங்களது சேவை நிலைமை தொடர்பில் சரியான தீர்வுகள் எடுக்கப்படாமல் இருப்பது கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக அதிபர் இல்லாத பாடசாலைகளை திறம்பட வழிநடத்தி வந்த போதிலும், சிலர் மீண்டும் ஆசிரியர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


மேலும், வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் பணியாற்றிய பலர் இந்நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்றம், பொது சேவை ஆணைக்குழுவின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானம் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.


இந்நிலையில், பதில் அதிபர்களுக்கென தனிப்பட்ட போட்டிப் பரீட்சை ஒன்றை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வயது வரம்பை கடந்தும் நீண்டகால சேவையாற்றியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


கல்வி அமைச்சு, மாகாண நிர்வாகங்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு பலமுறை எழுத்து மற்றும் நேரடி முறையில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் இதுவரை உறுதியான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்பதில் அவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.


மேலும், பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட கல்வி அமைச்சு அதிகாரிகளையும் நேரில் சந்தித்து தங்களது பிரச்சினைகள் எடுத்துரைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.


நாட்டின் கல்வி அமைப்பை நிலைநிறுத்துவதில் தங்களது பங்களிப்பு முக்கியமானது என வலியுறுத்திய பதில் அதிபர்கள், தங்களது மனிதாபிமான மற்றும் தொழில்நிலை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.


அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்தி, பதில் அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நீடித்த தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்



SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: