🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 “தூய்மையான கடற்கரை – கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்” சிரமதானப் பணி முன்னெடுப்பு..!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………
✅👉 காரைதீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், காரைதீவு பிரதேச சபை மற்றும் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் “தூய்மையான கடற்கரை – கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்” எனும் தொனிப்பொருளில் விசேட கடற்கரை சிரமதானப் பணி இன்று (23) காலை நடைபெற்றது.
காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில், காரைதீவு பிரிவு பொதுமக்கள், இளைஞர்கள், சமூக அமைப்புகள் உள்ளிட்ட பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு கடற்கரைப் பகுதிகளை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் கடற்கரை, காரைதீவு சுனாமி நினைவுத்தூபி கடற்கரை மற்றும் காரைதீவு அனர்த்த முகாமைத்துவ நிலைய கடற்கரை ஆகிய பகுதிகளில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வின் மூலம் கடற்கரைப் பகுதிகளை சுத்தமாகவும் கவர்ச்சிகரமாகவும் பேணுவதின் அவசியம் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன், உதவி பிரதேச செயலாளர் பி.பிரணவரூபன், பிரதேச செயலக அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
“சுத்தமான சூழல் – பாதுகாப்பான எதிர்காலம்” என்ற செய்தியையும் இந்நிகழ்வு வலியுறுத்தியது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்









0 comments: