Thursday, May 14, 2026

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பிக்கும் முகாம்..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉  பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பிக்கும் முகாம்..!


✍️  மாளிகைக்காடு செய்தியாளர் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇


✅👉  சாய்ந்தமருது மாளிகைக்காடு பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பு,  அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா மற்றும் சொப்டா கெயார் நிறுவனங்களின் அனுசரனையுடன் இம்முறை பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட  அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களுக்கான கற்கை நெறி தெரிவு மற்றும் விண்ணப்பித்தல் செயன்முறை தொடர்பான வழிகாட்டலும், “பல்கலைக்கழக விண்ணப்பம் நிரப்பும் முகாமும்” நிகழ்வு 2026.05.13 அன்று காலை 9.00 மாலை 7.00 வரை சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் நடாத்தினர்.


இந் நிகழ்வில் பிரதம வளவாளராக  சபீர் ஹமீட் அவர்கள் கலந்து கொண்டு , பல்வேறு துறைகளிற்கும் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட  மாணவர்களுக்கான விண்ணப்பித்தல் மற்றும் கற்கை நெறி தெரிவு தொடர்பான வழிகாட்டலை வழங்கினார். 


மேலும் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் மற்றும் சமூகவியல் துறை பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், சட்டமொழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும், ஓய்வு பெற்ற சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம். சலீம், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளரும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு முன்னாள் உறுப்பினருமான நூருல் ஹுதா உமர் ஆகியோர் கலந்து கொண்டு பல்கலைக்கழக நடைமுறை, எதிர்கால கல்வி மேம்பாடு, பட்டதாரிகளின் சமூக கடமைகள் தொடர்பில் விஷேட உரையாற்றினர். 


மேலும் இந் நிகழ்வில் பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வரும் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், ஓய்வு பெற்ற சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம். சலீம், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் நூருல் ஹுதா உமர், சொப்டா கெயார் நிறுவன பணிப்பாளர் பொறியியலாளர் எம். நஸீர், ஆகியோர்களை சாய்ந்தமருது மாளிகைக்காடு பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பினர் கௌரவித்ததோடு , மிக நீண்ட கால சமூக கல்வி பணியினை மேற்கொண்டு வரும் ஏ.எச். சபீர் ஆசான் அவர்களும் இந் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார். 


சுமார் 150 இற்கும் மேற்பட்ட அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டு பயன் பெற்றதோடு, சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். மேலும் பல சமூக , கல்வி , நல செயற்திட்டங்களை மேற்கொள்ள சாய்ந்தமருது மாளிகைக்காடு பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பானது தொடர்ச்சியாக பயணித்து வருகின்றது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ  எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்











SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: