Thursday, May 14, 2026

இறக்காமம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ரமழான் விஷேட போட்டிகளின் பரிசளிப்பு விழா - 2026..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 இறக்காமம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ரமழான் விஷேட போட்டிகளின் பரிசளிப்பு விழா - 2026..!


✍️ ஏ.எச்.றகீப் (இறக்காமம்)


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……..


✅👉 இறக்காமம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ரமழான் விஷேட போட்டிகளின் பரிசளிப்பு விழா - 2026 (Ramadan Special Competition Awarding Ceremony – 2026) நிகழ்வு 2026.05.13 ஆம் திகதி புதன்கிழமை இறக்காமம் கலாசார மண்டபத்தில் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.


மாணவர்களிடையே சமய, ஒழுக்க மற்றும் கல்வி விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கிலும் ரமழான் மாதத்தின் ஆன்மீகப் பண்புகள் பற்றிய புரிதல்களை விருத்தியாக்கும் நோக்கிலும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


நிகழ்வில் குர்ஆனை முறையாக ஓதல், குர்ஆன் மனனம், ஹதீஸ் மனனம், இஸ்லாமிய பேச்சுப் போட்டி மற்றும் பல்வேறு சமய மற்றும் திறன் போட்டிகளில் பங்கேற்று குறித்த இடங்களைப் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கான பரிசுகள், சான்றிதழ்கள்,பதக்கங்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் என்பன வழங்கப்பட்டன.


உதவிப் பிரதேச செயலாளர் அய்மா நிஃமத்துல்லா தலைமையில் நடைபெற்ற இப்பரிசளிப்பு விழாவின் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். 


மேலும், பிரதேச செயலக கணக்காளர் ஐ.எல்.எம். றிபாஸ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், நிருவாக உத்தியோகத்தர் ஐ. எல்.எம். றஸாக், நிருவாக கிராம உத்தியோகத்தர் நிலுபுல் குமார உட்பட இறக்காமம் கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலை அதிபர்கள், இறக்காமம் ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எச். வஹாப் (இஸ்லாஹி) மற்றும் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.கே.எம். றுவைஸ் (ஸலபி) உட்பட கண்ணியமிக்க உலமாக்கள், ஜும்மா பள்ளிவாசல்களின் தலைவர்கள் ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.


அத்தோடு, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


ரமழான் மாதம் மனிதர்களின் ஒழுக்கத்தையும பொறுமையையும் பகிர்வுத் தன்மையையும் வளர்க்கும் புனிதமான மாதமாகும். இவ்வாறான போட்டிகள் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கும் சமய அறிவு மேம்பாட்டிற்கும் முக்கிய பங்காற்றுகின்றன. 


மேலும், இளம் தலைமுறையினரை நல்லொழுக்கம், ஒற்றுமை மற்றும் சமயப் பற்றுடன் வளர்ப்பதில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என்பதை வலியுறுத்தும் நிகழ்வாக இது அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்




















SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: