Wednesday, April 8, 2026

வரிப்பத்தான்சேனை பெரியபாலம் ஒளியூட்டல் – நீண்டகால கோரிக்கைக்கு தீர்வு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰


✅👉 வரிப்பத்தான்சேனை பெரியபாலம் ஒளியூட்டல் – நீண்டகால கோரிக்கைக்கு தீர்வு..!


✍️ நூருல் ஹுதா உமர் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇


✅👉 வரிப்பத்தான்சேனை பகுதியில் அமைந்துள்ள இறக்காமம் பிரதேச சபையின் நுழைவாயிலாக விளங்கும் பெரியபாலம் பகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த ஒளியூட்டல் குறைபாடு தற்போது தீர்க்கப்பட்டுள்ளது.


சுற்றுலா அமைச்சின் “நகரங்களை அழகுபடுத்தல்” திட்டத்தின் கீழ் இந்த ஒளியூட்டல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இறக்காமம் பிரதேச சபை தலைவர் கௌரவ எம்.எல்.எம். முஸ்மி அவர்களின் வழிகாட்டலில், முன்னாள் உதவி தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான என்.எம். ஆஷீக் மற்றும் உறுப்பினர் ஏ.ஜி.எம். சாக்கீர் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.


மேலும், இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவி செய்த உதவி தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், சபை செயலாளர் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் வரிப்பத்தான்சேனை பிரதேச மக்கள் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


இத்திட்டத்தின் மூலம், இரவு நேரங்களில் பயணிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பும், பகுதியின் அழகும் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்





SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: