Friday, April 24, 2026

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் கோட்டமட்ட விளையாட்டுப் போட்டிகளில் சாதனை..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉  கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் கோட்டமட்ட விளையாட்டுப் போட்டிகளில் சாதனை..!


✍️  யு.எல். அலி. ஜமாயில் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………..


✅👉  கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தினால் அண்மையில் நடாத்தப்பட்ட கோட்டமட்ட விளையாட்டுப் போட்டிகளில், இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்குபற்றி சிறந்த வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர்.


பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத் திறன்களையும் ஆளுமைகளையும் வெளிப்படுத்தும் நோக்கில் அமைந்த இப்போட்டிகளில், இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வீர வீராங்கணைகள் தங்களது அபார திறமைகளை வெளிப்படுத்தி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.


இப்போட்டிகளில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்களின் விபரங்கள் வருமாறு:


#. எஸ்.எப். அதீபா (SF ATHEEFA - 18 வயதுக்குட்பட்ட மாணவிகள்):

800 மீற்றர் ஓட்டப்பந்தயம் – முதலாம் இடம்

200 மீற்றர் ஓட்டப்பந்தயம் – இரண்டாம் இடம்

400 மீற்றர் ஓட்டப்பந்தயம் – மூன்றாம் இடம்.


#. ஏ.எம். ஆபித் (AM AABITH - 16 வயதுக்குட்பட்ட மாணவர்கள்):

100 மீற்றர் ஓட்டப்பந்தயம் – மூன்றாம் இடம்.


#. ஆர்.எப். அப்ரா (RF AFRA - 16 வயதுக்குட்பட்ட மாணவிகள்):

800 மீற்றர் ஓட்டப்பந்தயம் – மூன்றாம் இடம்.


#. ஆர்.எப். ஆசிகா (RF AASIKA - 12 வயதுக்குட்பட்ட மாணவிகள்):

நீளம் பாய்தல் – மூன்றாம் இடம்


அஞ்சலோட்டப் போட்டிகள் 

(Relay):

16 வயதுக்குட்பட்ட மாணவிகள் (4X400M) – இரண்டாம் இடம்


16 வயதுக்குட்பட்ட மாணவிகள் (4X100M) – மூன்றாம் இடம்.


குறிப்பாக

இப்போட்டி முடிவுகளின் அடிப்படையில், எமது பாடசாலையைச் சேர்ந்த வீராங்கனை எஸ்.எப். அதீபா இரண்டு போட்டி நிகழ்ச்சிகளுக்காக வலய மட்டப் போட்டிகளில் பங்குபற்றத் தகுதி பெற்றுள்ளார். அத்துடன், 16 வயதுப்பிரிவு மாணவிகளின் 4x400 மீற்றர் அஞ்சலோட்டக் குழுவும் வலய மட்டப் போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.


ஒட்டுமொத்தமாக இப்பாடசாலை மாணவர்கள் பெற்ற இடங்கள். 

1ம் இடம்.  - 1

2ம் இடம்.  - 2

3ம் இடம்.  - 6


மாணவர்களையும், அவர்களுக்குப் பயிற்சியளித்த ஆசிரியர்களுக்கும் பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிசாத் அவர்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ  எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்





SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: