𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒
𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 

…………
இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் நடைபெற்றுவரும் நிலையில் இன்று இன்னுமொரு சந்தேக நபர் கௌரவ நீதவான் நூர்தீன் சர்ஜுன் முன்னிலையில் முன்னிறுத்தப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றது. இந்நிலையில் இன்றிலிருந்து இரு வாரங்களுக்கு விளக்கமறியலுக்கு அவர் உட்படுத்தப்பட்டுள்ளார். இன்னும் சில சந்தேக நபர்களை கைதுசெய்ய பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நீதிமன்றுக்கு தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஏ.எம்.நஸீல், எம்.வை. அன்வர் ஸியாத், ஷாமிலா மன்சூர், முஹம்மட் பிர்னாஸ் போன்ற சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.
இது விடயம் தொடர்பில் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிக்கையில், இவ்வாறானவர்கள் பற்றி இளைஞர் யுவதிகள் விழிப்புடன் இருக்குமாறும், சமூக வலைத்தளங்களில் பெண்கள், சிறுமிகளின் புகைப்படங்களை பதிவேற்றுவதை தவிர்ந்து கொள்ளுமாறும் சமூக வலைத்தள பதிவுகளை தவறாக மாற்றி பயன்படுத்துவது சட்டவிரோதமாகும், தனிப்பட்ட மக்களின் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற நிகழ்வுகளை சந்திக்கும்போது உடனடியாக பொலிஸைத் தொடர்புகொள்ளுமாறும் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
www.mihrajnews.com


0 comments: