Wednesday, April 1, 2026

மருதமுனையில் 'உயிர்த்தெழும் சருகுகள்’ நூல் வெளியீட்டு விழா..!

Ad 728x90

 



🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉  மருதமுனையில் 'உயிர்த்தெழும் சருகுகள்’ நூல் வெளியீட்டு விழா..!


✍️  நூருல் ஹுதா உமர் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇


✅👉  மருதமுனையை சேர்ந்த சிரேஷ்ட தமிழ்ப்பாட ஆசிரியை பாத்திமா ஸூபா தல்ஹா எழுதிய “உயிர்த்தெழும் சருகுகள்” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா,  (28) சனிக்கிழமை மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.


Renge view சிறிலங்கா நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட இந்த நூல், கவிதாயினியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பாகும். ஏற்கனவே “சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்” எனும் நூலை வெளியிட்டுள்ளார்.  
















பொரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் மகா வித்தியாலய அதிபரும், சிரேஷ்ட அறிவிப்பாளருமான எ. முஹம்மட் அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வரவேற்புரையை ஊடகவியலாளர் றாசிக் நபாயிஸ் நிகழ்த்தினார்.


முதன்மை விருந்தினராக முன்னாள் அமைச்சரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வருமான ஏ.எல்.எம். அதாஉல்லா கலந்துகொண்டதுடன் கௌரவ விருந்தினர்களாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பங்கேற்றார்.


நூலின் வெளியீட்டாளர் உரையினை டாக்டர் எஸ்.எம். தல்ஹாவும், நூல் தொடர்பான ஆய்வுரையை ஆசிரிய வளவாளரும் இலக்கிய விமர்சகருமான ஜெஸ்மி எம். முஸா வழங்கினார். நிகழ்வை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.எல்.எம் ஷினாஸ் தொகுத்து வழங்கினார்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ  எஸ்என்.ஹஸ்மி

SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: