Wednesday, March 25, 2026

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

Ad 728x90

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
✍️ எஸ். சினீஸ் கான்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………
✅👉 ஈதுல் பித்ர் (நோன்புப் பெருநாள்) திருநாளை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் இப்பெருநாளை அனைவருக்கும் நலம், வளம் மற்றும் அருட்கொடைகள் நிறைந்ததாக மீண்டும் மீண்டும் வழங்கி அருள வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.
இந்த புனிதமான தருணத்தில், இரு புனிதஸ்தலங்களின் காவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் ஸஊத் அவர்களுக்கும், பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் ஸஊத் அவர்களுக்கும், சவுதி அரேபிய மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கம் மற்றும் மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன், இலங்கை தொடர்ந்தும் முன்னேற்றமும் செழிப்பும் அடையவும், உலகம் முழுவதும் பாதுகாப்பும், ஸ்திரத்தன்மையும், அமைதியும் நிலவ வேண்டுமெனவும் பிரார்த்தித்துக்கொள்கிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரதும் நற்செயல்களை அங்கீகரிக்க வேண்டுமெனவும், இந்த பெருநாளை மக்களிடையே சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை ஆகிய விழுமியங்களை வலுப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாக மாற்றியருள வேண்டுமெனவும் பிரார்த்திக்கிறேன்.
இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.
காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி
இரு புனித ஹரம்களின் காவலரின் (சவுதி அரேபியாவின்) இலங்கைக்கான தூதுவர்
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி


 

SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: