Wednesday, March 11, 2026

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய அபிவிருத்தி குழுவின் ஒன்றுகூடலும், நிர்வாகிகள் தெரிவும்..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய அபிவிருத்தி குழுவின் ஒன்றுகூடலும், நிர்வாகிகள் தெரிவும்..!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………….
✅👉 புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தை முகாமை செய்வதற்கான அபிவிருத்தி குழுவின் ஒன்றுகூடலும், நிர்வாகிகள் தெரிவும் இன்று (27) இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது சாய்ந்தமருது மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.பி.நௌசாத்தின் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிக்கா அவர்களின் தலைமையில் கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
இந்த ஒன்றுகூடலில் மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.பி.நௌசாத் கலாசார மத்திய நிலையத்தின் தொழிற்பாடுகள், எதிர்கால வேலைத்திட்டங்கள், மேம்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் அபிவிருத்தி குழுவினருக்கு விளக்கினார்.
மேலும், இந்த கலாசார மத்திய நிலையத்தின் இவ்வருட நிர்வாகத்தின் தலைவராக மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.பி.நௌசாத், செயலாளராக மருதம் கலைக்கூடல் மன்ற தலைவர் கலைஞர் அஸ்வான் மௌலானாவும், உபதலைவராக ஆசிரியரும், கலைஞருமான எம்.சி.ஏ.மாஹிர் , உப செயலாளராக அல்- மீஸான் பௌண்டஷன் தவிசாளர் கலைஞர் நூருல் ஹுதா உமரும், பொருளாளராக பதவி வழியில் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தின் வளவாளர் எம்.எச்.ஏ. ஹபீழ் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக கலைஞர்களான எம்.எஸ்.எம். சாஹிர், ஏ. இஸ்ஸதீன், எம்.எச்.முபாரக், எம்.ஐ. அலாவுதீன், பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.சி. முஹம்மட், கலாசார உத்தியோகத்தர் எம்.தௌபீக், பிரதேச செயலக உத்தியோகத்தர் ஆர்.எம். இம்தாத், கணக்காய்வாளராக ஓய்வுபெற்ற கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஸ்ரப் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த அபிவிருத்தி முகாமைத்துவ குழுவினர் தொடர்ந்தும் கலாசார மத்திய நிலைய நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர். இந்த குழுவின் ஆலோசகர்களாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிக்கா, கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம். பழீல், கலைஞர் மருதூர் என்.எம். அலிகான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். குறித்த நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஏ.எச். சபிக்கா, கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: