𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄
இந்நன்னாளை முன்னிட்டு, ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொருளாளருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் தனது இதயம் கனிந்த ஈத் வாழ்த்துகளை மக்களிடம் தெரிவித்துக் கொள்கிறார்.
அவர் தனது செய்தியில்,
“இன்று புனிதமான ஈதுல் ஃபித்ர் தினமாக இருந்தாலும், தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பல சவால்கள் நிறைந்த ஒரு சூழ்நிலையை நாம் எதிர்கொண்டு வருகிறோம்.
குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண யுத்த சூழ்நிலைகள் உலக முஸ்லிம் சமூகத்தின் மனங்களை வேதனைக்குள்ளாக்குகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்,
“முஸ்லிம் உம்மத்தினரிடையே பிளவுகளையும் பிரிவினைகளையும் உருவாக்கும் சக்திகளிலிருந்து எம்மை அல்லாஹ் காக்க வேண்டும். எமது சகோதரத்துவத்தை வலுப்படுத்தி, ‘ஒற்றுமை’ எனும் உறுதியான கயிற்றைப் பற்றிப் பிடித்து, ஈமான் வழியில் ஒன்றிணைந்து நிற்கும் வலிமையை அல்லாஹ் எமக்கு அருள்வானாக” என மனமாரப் பிரார்த்தித்துள்ளார்.
அத்துடன்,
“உலகில் நிலவும் அநீதிகளும் அசாதாரண சூழ்நிலைகளும் நீங்கி, முஸ்லிம் நாடுகள் அமைதி, ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்தின் பாதையில் பயணிக்க அல்லாஹ்வின் அருள் கிடைக்க வேண்டும்” எனவும் அவர் துஆ செய்துள்ளார்.
இலங்கை குறித்து குறிப்பிடுகையில்,
“நாம் வாழும் இந்நாட்டில் நிலவும் சவால்களைத் தாண்டி, அனைத்து இன மக்களும் நல்லிணக்கம், சக வாழ்வு, சமத்துவம் மற்றும் நிலையான சமாதானம் ஆகிய உயரிய பண்புகளுடன் ‘ஒரே நாடு – ஒரே தேசம்’ என்ற மனப்பாங்கில் ஒன்றிணைந்து வாழ அல்லாஹ்வின் அருள் பொலிவதாக” என அவர் வேண்டிக் கொண்டுள்ளார்.
இறுதியாக,
“இந்த புனிதமான ஈதுல் ஃபித்ர் தினம் எம் அனைவரின் வாழ்விலும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் அல்லாஹ்வின் அருள் பொலிவை நிரப்பட்டும்” என தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஆமீன் .
ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி


0 comments: